பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வு.
யூத் ரெட் கிராஸ், ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் ஸ்ராமல் அகாடமி இணைந்து இராமநாதபுரத்தில் நடத்திய மாவட்ட அளவிளான சிலம்பம் போட்டி இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்ட அளவில் சுமார் 800 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.தாரணி பல்வேறு மாணவிகளை தோற்கடித்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கத்தையும், பாராட்டுச் சான்றிதழையும் பரிசாகப் பெற்றார்.
இம்மாணவி அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியையும் சிறப்பான முறையில் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் கீழ்முஸ்லிம் ஜமாத் சபைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.ரபி அகமது, செயலாளர் கமருல் ஜமாலுதீன், பொருளாளர் இ.முகம்மது உமர், பள்ளியின் தாளாளர் சாதிக் பாட்சா, தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான், உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் “இலவச கேஸ் இணைப்பு” சிறப்பு முகாம்