பரமக்குடியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி.
பார்த்திபனூர் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் ஶ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய ஆயுஷ் குழுமம், தமிழக அரசின் இந்திய மருத்துவம், ஹோமியோ பதித்துறை, மற்றும் மாவட்ட சித்த மருத்துவத்துறை வழிகாட்டுதலின் படி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற சித்த மருத்துவ விழிப்புணர்வு பேரணி சோமநாதபுரத்தில் நடைபெற்றது.
இப்பேரணியை ஸ்ரீ முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. பார்த்திபனூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுகந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாணவர்கள் சித்த மருத்துவ விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பிகொண்டு சோமநாதபுரம் சமுதாயக் கூடத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று சித்த மருத்துவ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர். பார்த்திபனூர் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.துளசி நன்றி கூறினார்.
விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் ராமசந்திரன், தீபராஜ், குணசீலன் மற்றும் சுகாதார பணியாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் வீடுகளுக்குள் படையெடுக்கும் விஷ பாம்புகள்