Tuesday, June 6, 2023
Homeஉடல்நலம் அறிவோம்தமிழ்நாட்டில் பரோட்டாவிற்கு தடையா?

தமிழ்நாட்டில் பரோட்டாவிற்கு தடையா?

பரோட்டா செய்வது எப்படி (Parotta)

மைதா மாவை நன்றாக சலித்து பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். பின்னர் சூடு செய்த தண்ணீரை எடுத்து மைதா மாவில் உள்ள பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

நல்ல சுத்தமான எண்ணெய், முட்டை, உப்பு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்துப் போட்டு நன்றாக மைதா மாவை பிசைய வேண்டும்.

பிசைந்த மைதா மாவை குறைந்தது மூன்று மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மாவை எடுத்து நன்றாக கையால் அடித்து பிசைய வேண்டும். பின்னர் விலைக்கு ஏற்றார் போல் உருண்டைகளாக உருட்டி பிடிக்க வேண்டும்.

மைதா உருண்டை

ஊறவைத்த உருண்டையை எடுத்து கையால் அமுக்கி இரண்டு கைகளாலும் பிடித்து பெரிய அளவிற்கு தோசை போல் வருமாறு செய்ய வேண்டும்.

அதை நான்கு பக்கமும் மடித்து பரோட்டா கல்லில் போட வேண்டும். நன்றாக பரோட்டா கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

பரோட்டா ரெடி

பரோட்டா கல்லில் பரோட்டாவை திருப்பி திருப்பி போட்டு விட்டு பிறகு நன்றாக இரண்டு பக்கமும் சிவந்தவுடன் புரோட்டாவை எடுத்து நன்றாக கையால் அடிக்க வேண்டும்.

பின்னர் புரோட்டாவை இலையில் எடுத்து வைத்து சிக்கன் சால்னா, மட்டன் சால்னா, சைவ சால்னாவை ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வேதிப்பொருட்கள்

கோதுமை என்பது பழமை வாய்ந்த தாவரமாகும். வெள்ளை கோதுமை என்று அழைக்கப்படும் மைதாவால் தான் பரோட்டா செய்யப்படுகிறது.

மைதா மாவு என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் என்பதிலிருந்து தயாராகிறது. எண்டோஸ்பெர்ம் உள்பகுதியை அரைத்தால் மஞ்சள் நிறமாக இருக்கும்.

அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் மைதாவில் சேர்க்கப்படுகிறது. மைதா மாவை மிருதுவாக மாற்ற அலக்ஸான் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் தடை

பிரிட்டன், ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் மைதா மாவை பளிச்சென இருக்க சேர்க்கப்படும் வேதிப் பொருளான பென்சாயில் பெராக்சைடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளி நாடுகளில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து மைதா உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மைதாவில் நூறு சதவிகிதம் சர்க்கரை சத்துக்கள் மட்டுமே உள்ளது.

இதில் நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எந்தப் பொருட்களும் இல்லாததால் எளிதில் ஜீரணமாகாது.

கலப்படம்

அழகு நிலையங்களில் முகத்தை அழகாக்கவும் முகப்பருவைப் போக்கவும் “பென்சாயில் பெராக்ஸைடு” என்ற வேதிபொருள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

தொற்று நோய்கள்

பென்சாயில் பெராக்ஸைடு மைதா மாவு போன்ற உணவுப் பொருட்களில் கலப்பதால் நீரழிவு நோய் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

கணையத்தில் நீரை சுரக்க விடாததால் கணையம் சோர்வடைந்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது.

இதனால் கணையத்தில் இன்சுலின் சுரக்க விடாமல் தடுப்பதால் நீரழிவு நோய் ஏற்படுகிறது.

மைதா கலந்த உணவை சாப்பிடுவதால் ரத்த நாளங்கள் முழுமையாக பாதிக்கப்படும்.

கெட்ட கொழுப்புகள் உற்பத்தி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களால் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பரோட்டாவை ஒழிப்போம்! மனித உயிரை காப்போம்!

என்ற உறுதிமொழியை எடுத்து இன்று முதல் பரோட்டா சாப்பிடுவதை தவிருங்கள் மக்களே.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments