பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா தொடக்கம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் திருமகனார் ஆலயத்தில் ஆண்டு தோறும் தேவர் திருமகனார் ஜெயந்தி விழா, குருபூஜை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேர்த்திக்கடன்
குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருதல், முடியிறக்குதல் போன்ற நேர்த்திக்கடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பசும்பொன் தேவர் திருமகனார் ஆலயத்தில் கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பின், கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
அக்.28 காலை நான்காம் கால வேள்வி பூஜை மற்றும் வேத பாராயணம், தீபாராதனை, யாத்ராதானம் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு தேவர் திருமகனார் ஆலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது.
ஆன்மீக விழா
கருடன் வந்து வட்டமிட்டதும் கோயில் கோபுரம் கலசம் மற்றும் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வழக்கமான ஆன்மீக விழா நடைபெற்றது. நாளை அரசியல் விழாவும், நாளை மறுநாள் குருபூஜை பெருவிழாவும் விமரிசையாக நடைபெறுகிறது.