பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும்.
செம்பிய நாடு மறவர் சங்க மாநில தலைவர் சி.எம்.டி.ராஜாசேதுபதி கோரிக்கை.
பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சி.எம்.டி.ராஜாசேதுபதி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் செந்தில் முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் மணிமுத்து கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
தேசிய விழா
இக்கூட்டத்தில் செம்பிய நாடு மறவர் சங்க மாநில தலைவர் சி.எம்.டி.ராஜாசேதுபதி பேசியதாவது, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும். மறைக்கப்பட்ட ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, விஜயரகுநாத சேதுபதி, பாஸ்கர சேதுபதி ஆகியோருடைய வரலாறுகளை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதிக்கு ராமநாதபுரத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.
வெங்கலச் சிலை
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். சிவகங்கையில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெங்கலச் சிலை வைக்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று ஜாதியினரையும் ஒன்றிணைத்து தேவர் இனமாக அறிவித்து அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டதை, பின்பற்றி தற்போது உள்ள தி.மு.க அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். என பேசினார்.
அன்னதானம்
பின்னர் கூட்டத்தில் பேசிய பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சங்கத்தின் சார்பில் பசும்பொன்னில் வரும் 29ம் தேதி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானத்தை அனைத்து முக்குலத்து நல கூட்டமைப்பு தலைவர், ஓய்வு பெற்ற தடவியல் துறை ஐ.ஜி .சி.விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
போலீஸ் பாதுகாப்பு
தேவர் குருபூஜை விழாவிற்கு காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளித்து அமைதியான முறையில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் நிர்வாகிகள் சிவராமன், ராஜ்குமார், வெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.