பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு அனுமதி பெற வேண்டும் –
மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ராமநாதபுரம்
தேவர் குரு பூஜைக்கு வெளிமாவட் டத்தினர் வருவதற்கு அனுமதி தேவை’ என்று ராமநாதபுரம் ள் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குரு பூஜை விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை, அரசு அலுவலர்கள். பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வகித்தனர்.
இதில் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவின்படி தேவர் ஜெயந்தி, குரு பூஜை நிகழ்ச்சியில் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனங்கள், திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதி இல்லை
சொந்த நான்கு சக்கர வாகனங்களில் வர விரும்புவோர் சம்பந்தப்பட்ட உட்கோட்ட காவல் அலுவலகங்களில் முன் அனுமதி பெற்று வர வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.
வாகனங்களில் மது பாட்டில்கள் செல்லக்கூடாது. வாகனங்களின் கூரைமேல் பயணம் செய்யக்கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக்கூடாது. வழித்தடங்களில் வெடிபோடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெறவேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப் பட்டுள்ள வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும்.
தலைவர்களுடன் செல்லும் போது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மேலும், தலைவர்களது வாகனம், அதனு டன் செல்லும் 2 வாகனங்கள் குறித்த விவரத்தை நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே (அக்.23) மாவட்ட காவல் அலுவலகத்தில் தெரிவித்து வாகன அனுமதி பெற வேண்டும் அஞ்சலி செலுத்த வருபவர் களில் பதிவு செய்யப்பட்ட அர சியல் கட்சிகள் மற்றும் அமைப் புகளின் தலைவர்களுக்கு, பிரதி நிதிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும். அக்.29, 3 தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும்