பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் – இசக்கி ராஜா ‘உயிருக்கு ஆபத்து’
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க – நிர்வாகிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம், பசும்பொன் நகர், பாளை ரோடு மேற்கில் வசித்து வருபவர் இசக்கி ராஜா. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை நிறுவி கடந்த பல ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறார். மேற்கண்ட அமைப்பானது விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். தமிழ்நாடு முழுவதும் இயக்கத்தில் 2000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகளை வழிநடத்தி வருகிறார்.
உயிருக்கு ஆபத்து
முக்குலத்தோர் சமுதாயத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்று வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் காழ்ப்புணர்ச்சி, சமுதாய பணி, சமூக வளர்ச்சியை தடுக்க நினைக்கும் சமூக விரோதிகளாலும் இசக்கி ராஜா தேவர் உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது.
திருவாரூர் ரவுடிகள் – கூலிப்படை
இவரது சமுதாய வளர்ச்சியை பிடிக்காத குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் ஒன்று சேர்ந்து கூலிப்படை மூலம் கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இவர் சென்று வரும்பொழுது ரவுடிகள் நோட்டமிட்டதை அறிந்த உளவுத்துறையினர் நேரடியாக இசக்கிராஜாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துப்பாக்கி – போலீஸ் பாதுகாப்பு
கடந்த சில ஆண்டுகளாக இவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என இயக்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.