இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் அதிகமாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றது.
கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் கால்நடை சாலைகளில் சுற்றித் மற்றும் திரியும் விபத்துகள் ஏற்படுவதாலும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தெருக்கள் மற்றும் சாலைகளில் விடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கால்நடை உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடும் கால்நடை உரிமையாளர்களது கால்நடைகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஏலமிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.