ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு சாமிதரிசனத்திற்கு வருகை தந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தங்கி ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தெருக்களில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
உலகப் புகழ்பெற்ற 12 ஜோதிலிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் அமைந்துள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து தினசரி 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாண்மையான பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குழுக்களாக வருகை தந்து பல நாட்களாக தங்கி சேவை செய்வது சாமி தரிசனம் செய்வது தீர்த்தம் ஆடவது போன்ற பணிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய் பாபாஜி பக்த பரிவார் சுவாமிஜி தலைமையில் மகாராஷ்டிராவை சேர்ந்த 400 பெண் கள் 600 ஆண்கள் சேர்ந்து ஆயிரம் பக்தர்கள் வருகை தந்தனர்.
இவர்கள் காசிக்கு நிகராக கருதப்படும் அக்கினி தீர்த்தக்கடலில் புனித நீராடினர் அதன் பின்னர் ராமநாதசாமி திருக்கோவில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தில் புனித நீராடினார்கள். ராமநாதசாமி திருக்கோவிலில் ராமநாதசாமி சன்னதி மற்றும் பர்வதவகத்தின் அம்மன் சன்னதியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளில் மற்றும் தீபாவனை வழிபாடுகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து ஒரு வார காலமாக ராமேஸ்வரத்தில் தனியார் மகாலில் தங்கி உலக நன்மைக்காக பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட்,திட்டக்குடி திருக்கோவில் நான்கு கோபுர வாசல்கள், மற்றும் பல இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இவர்கள் ஏழு நாள் மௌன விரதம் இருந்தும் எதுவும் சாப்பிடாமலும் மந்திரங்கள் மட்டும் ஜெபித்து தூய்மை பணியை மேற்கொள்கின்ற னர்.இவர்கள் செப்டம்பர் 5 முதல் 12 வரை 12 ஜோதிலிங்கத்திலும் ஒரு ஸ்தலமான ராமேஸ்வரத்தில் இப்பணியை செய்து வருகின்றனர். மனித நேயம் வலியுறுத்தி மகாராஷ்டிரா யு பி எம் பி குஜராத் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து இப்பணியை இந்தியா முழுவதும் செய்து வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.