முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில், அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
போலீஸார் அறிவுறுத்தால்
தேவர் ஜெயந்தியையொட்டி விதிக்கப்பட்டிருந்தகட்டுப்பாடுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் இருபுறங்களிலும் உள்ள கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தினர்.
கடைகள் அடைப்பு
மேற்கண்ட சாலைகளின் இருபுறங்கள் மட்டுமின்றி, திருப்புவனம், திருப் பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட நகர்ப் புறங்களிலும் பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லையான மணலூர், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் கடும் சோதனைக்குப் பின்னரே வாகனங்களை அனுமதித்தனர்.
பணிகள் பதிப்பு
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்ளுக்காக காரைக்குடியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனை மண்டலத்துக்குள்பட்ட போக்குவரத்துக் கிளை பணிமனையிலிருந்து பெரும்பாலான புறநகர், நகர்ப்புறப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலத்திலிருந்து ராமநாதபுரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட புறநகர், நகர்ப்புறப் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
ஆட்டோ, வாடகை கார்
தனியார் பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. இதனால், கிராம புறங்களிலிருந்து நகர் புறத்துக்கு அன்றாடப் பணிகள் சென்று வரும் பொதுமக்கள் ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வந்தனர்.