மக்களின் கோரிக்கைகளை நகர சபை கூட்டத்தில் அங்கீகரிக்கப் படவில்லை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற சிறப்பு நகரசபைக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்க நேரம் அளிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பங்கேற்றனர்
கீழக்கரை நகராட்சியில் 21 வது வார்டுகளிலும் நேற்று முன்தினம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாலையில் 17,18-வது வார்டுகளில் நகராட்சி தலைவர் ஷெஹான அபிதா தலைமையிலும், துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் பகுதி நகரசபை கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்கவில்லை
சிறப்பு நகரசபை கூட்டத்தில் அதில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறியாமல் புறக்கணித்ததாக சலசலப்பு ஏற்பட்டது.17-வது வார்டு சமூக ஆர்வலர் ஒருவர் பேச முயற்சித்தபோது, நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற . உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் அவரை தடுத்தனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பை ஏற்பட்டது
அதனையடுத்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது குடிநீர் குழாய்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். பழைய மீன்கடையில் இருந்து புதிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தரவேண்டும் கழிவு நீர் வாறுகால்களை உயர்த்தி கட்டி, அதை மூடும் வேலைகள் 6 மாதங்களுக்கு முன்பு நடந்தன. தற்போது அப்பணிகள் முழுமை அடையாமல் சில இடங்களில் மூடி போடாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றார்.
17-வது வார்டைச் சேர்ந்தவர் தெரிவித்தது
வள்ளல் சீதக்காதி சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் வாறுகாலை உயர்த்தி, மூடி போடும் பணி தொடங்கப்பட்டு 10 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. ஆனால், பணிகள் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. இப்பணியை நிறைவு செய்ய வேண்டும் என்றார். தலைவர் பாசித் இலியாஸ் கூறும்போது, கீழக்கரையில் நடந்த நகரசபைக் கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. இது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என புகார் அளித்தனர்