Sunday, May 28, 2023
Homeராமநாதபுரம்ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,கலந்து கொண்டனர் 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

மனுக்கள் பெறப்பட்டது

மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.

பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 38 -வது மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பாரதியார் தின குழு ஹாக்கி விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments