ஊறுகாய் தயாரிப்பு – தொழில்.
தக்காளி ஊறுகாய் செய்முறை:
- தேவையான பொருட்கள்:
- பழுத்தத் தக்காளி – ஒரு கிலோ.
- மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்.
- வெந்தயம் – 1 ஸ்பூன்.
- ரீஃபைண்ட் ஆயில் – 250 மில்லி.
- பூண்டு – 20 பல்.
- பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்.
- கடுகு – 1 ஸ்பூன்.
- உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்.
- உப்பு – தேவையான அளவு.
தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும்.
அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறி அஅகொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.
பிறகு வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை தாளித்து, பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும்.
இது சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள் || தக்காளி ஜாம் தயாரிப்பு – தொழில்