இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், காவனூர் ஊராட்சி நாகனேந்தல் கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சிறப்பு செயலாளர்.ஹர் சகாய் மீனா, அவர்களின் தலைமையில் 5000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதேபோல் அனைத்து ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்