பரமக்குடியில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானோ காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் வைகை ஆற்றுப்படுகையின் இருபுறமும் கருவேல மரங்கள் சூழ்ந்து நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது.
கருவேல மரங்கள், நாணல்கள்
இந்நிலையில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி ஆகியோர் ஏற்பாட்டில் 10 ஜே.சி.பி இந்திரங்களை கொண்டு காட்டு பரமக்குடி முதல் காக்கா தோப்பு வரை உள்ள வைகை ஆற்றின் இருபுறமும் உள்ள கருவேல மரங்கள், நாணல்களை அகற்றி வருகின்றனர்.
வீடுகளுக்குள் பாம்புகள்
இதனால் வைகை ஆற்று படுகையின் இருபுறமும் தங்கியிருந்த நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, கட்டுவிரியன், பச்சைப் பாம்பு உட்பட பல்வேறு பாம்புகள் கருவேல மரங்களை சுத்தம் செய்ததால் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இரவு நேரங்களில் உலா வரும் விஷப் பாம்புகள் வீடுகளில் உள்ள நாய்கள், ஆடு, மாடுகளை கடித்து வருகிறது.
மக்கள் அச்சம்
வைகை ஆற்று படுகையின் இருபுறமும் தங்கியிருந்த விஷப் பாம்புகள் வைகை நகர், புதுநகர், மஞ்சள்பட்டிணம், தர்மரஜபுரம், பெருமாள் கோவில் படித்துறை, முருகன் கோவில் படித்துறை, பாண்டியன் தெரு, எமனேஸ்வரம், காக்கா தோப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் பாம்புகள் படையெடுத்து வருகின்றது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் விஷப் பாம்புகள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் பயந்து வாழ்ந்து வருகின்றனர்.
மக்கள் கோரிக்கை
எனவே பாம்புகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படியுங்கள் || 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு உண்டு! காகர்லா உஷா திட்டவட்டம்