பொட்டிதட்டி சிவகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ காளியம்மன், கருப்பர், நாகம்மாள் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழா நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நயினார்கோவில் ரமேஷ் குருக்கள் பூஜையின்போது திருமறை, திருமுறை பாராயணம் பாடினர்.
சிறப்பு பூஜை, முளைப்பாரி
இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணி அளவில் ஸ்ரீ சிவகாளியம்மன், கருப்பர், நாகம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், தீபாரதரைகள், பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்.
அன்னதானம்
கோயில் வளாகத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவிந்தன் மற்றும் பொட்டிதட்டி, மந்திவலசை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பொட்டிதட்டி கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.