குறைந்த முதலீட்டில் உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சிப்ஸ் தயாரிப்பு தொழில் பற்றி பார்ப்போம்.
சந்தை
அனைத்து பேக்கரிகள் சில்லறை கடைகள், பார்கள், ஓட்டல்கள், ஸ்வீட் கடைகள் போன்றவற்றுக்கு சப்ளை செய்யலாம். இதே இயந்திரத்தை கொண்டு வீல், பிரயம் போன்ற பொருட்களையும் பொரித்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.
இயந்திரங்கள்
1.உருளைக்கிழங்கு தோல் சீவும் இயந்திரம்.
2.சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம்.
3.தண்ணீர் வெளியேற்றி காய வைக்க.
4.சிப்ஸ் வறுக்கும் இயந்திரம்.
5.பாக்கெட் போடும் இயந்திரம்.
பொருட்கள்
1. உருளைக்கிழங்கு.
2. எண்ணெய்.
3. மசாலாப் பொருட்கள்.
4. பேக்கிங் பொருட்கள்.
தயாரிக்கும் முறை
உருளைக்கிழங்கை முதலில் தோல் நீக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். உருளைக்கிழங்கு தோல் நீக்கி தண்ணீரில் கழுவி வெளிவரும். இந்தத் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிப்ஸ் வடிவில் வெட்டும் இயந்திரத்தில் போட வேண்டும். இங்கும் தண்ணீருடன் வெட்டி வெளிவரும் அதிகமான ஸ்டார்ச் கழுவி விடும்.
காய வைக்க
ஈரமான உருளை சிப்ஸ்களை நீர் வெளியேற்றி காய வைக்க வேண்டும். இந்த சிப்ஸ்களை எண்ணெய் கொப்பரையில் கொட்ட வேண்டும். உருளைக்கிழங்கு சிப்ஸ் இதில் நன்றாகப் பொரிந்து விடும். பின் எண்ணெயை வடியவிட்டு சிப்ஸ்களைத் தனியாக எடுக்க வேண்டும்.
நைட்ரஜன் கேஸ் பேக்கிங்
இந்த சிப்ஸை ஒரு உருளும் இயந்திரத்தில் இட்டு தேவையான உப்பு, காரம் மற்றும் சுவைக்காக மசாலா பொருட்களைச் சேர்க்க வேண்டும். இப்போது சிப்ஸ்களை முறையாகப் பாலிதீன் பைகளில் போட்டு சீல் செய்து விற்பனை செய்யலாம். பல நாட்கள் வைத்து விற்பனை செய்ய நைட்ரஜன் கேஸ் பேக்கிங் செய்யலாம். அனைத்திற்கும் இயந்திரம் உண்டு.
குறைந்த முதலீடு
இதில் சொல்லப்பட்டுள்ள இயந்திரங்கள் அனைத்தையும் வாங்க முடியாவிட்டால் தேவையான இயந்திரங்களை மட்டும் வாங்கி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.