ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது பொது மக்களுக்கு நலத்திட்டங்களையும் ஊக்கத் தொகையும் வழங்கினர். ஆய்வு செய்யப்பட்ட துறைகளிலிருந்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் முடித்து அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்ற அடையும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
ஊக்கத்தொகை வழங்கினர்
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் இ-பட்டா வழங்குதல் 25 பயனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம், இலவச சலவை பெட்டி 06 பயனாளிகளுக்கு ரூ.31,592/- மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் 05 பயனாளிகளுக்கு ரூ.3,345/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.3,84,937/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் வழங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
இக்கூட்டத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை , தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுதிமொழிக்குழு செயலாளர் முனைவர் சீனிவாசன் , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழிக்குழு இணைச்செயலாளர் கருணாநிதி , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழிக்குழு துணைச் செயலாளர் ரவி , மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.