ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி திருப்புல்லாணி போன்ற பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் முக்கிய இடங்களை மேம்படுத்தும் வகையில் ஆய்வில் மேற்கொண்டனர்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதியினை பார்வையிட்டனர்
திருப்புல்லாணியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என மாணவர்களிடம் கேட்டறிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்க இருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டு தரம் குறித்து மாணவர்களுக்கு நாள்தோறும் அரசு வழிகாட்டுதலின்படி சுவையான உணவை வழங்கிட வேண்டும்
நூலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து, இராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு சென்று பார்வையிட்டு சுமார் ஒன்றரை இலட்சம் புத்தகங்கள் உள்ள பெரிய நூலகமாக இருந்து வருவது , நூலகத்தில் கழிப்பறை வசதி கட்டடங்கள் அமைத்திட வேண்டி வாசகர்கள் கோரிக்கை வைத்ததையொட்டி கூடுதலாக கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நூலகம் இயங்கி வருவதாக தெரிவித்ததையொட்டி நகராட்சியின் மூலம் உடனடியாக மாற்று இடம் தேர்வு செய்து நூலகம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
நீர் வளத்தை அதிகரிக்க
பின்னர் கீழ் வைகை வடிநிலைக்கோட்டம் பரமக்குடி நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நயினார்கோயில் மற்றும் இராமநாதபுரம் ஒன்றியத்தின் வைகை ஆற்றின் கீழ் உள்ள பார்த்திபனூர், நீர்ஒழுங்கியின் இடது பிரதான கால்வாய் நெடுகை 22.20 முதல் 45.00 கிலோமீட்டர் வரை மற்றும் கீழ் நாட்டாற்கால் விரிவு வாய்க்கால்களை புனரமைக்கும் பணி ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும், சிறகிக்கோட்டை மற்றும் பாண்டியூர் பகுதியில் பணிகளை பார்வையிட்டு பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் அன்பழகன் அறிவுறுத்தினார்.
ஆய்வில் பங்காற்றிய உறுப்பினர்கள்
இந்த ஆய்வில இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூடுதல் செயலர் சுப்ரமணியன் , கீழ்வைகை நில வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.