ராமநாதபுரம் மாவட்டத்தின் ரேஷன் கடைகளில் கெட்டுப்போன அரிசி விநியோகம் செய்வதாக நகரசபை கூட்டத்தில் ஏராளமான பெண்கள் குற்றம் சாட்டினர். அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் உறுதி அளித்தனர்.
புகார் தெரிவித்த அப்பகுதி மக்கள்
ராமநாதபுரம் கள்ளர் என்ற தெரு பகுதியில் நகரசபை கூட்டம் நடைபெற்றது. அச்சபை கூட்டத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. பிரவீன் தங்கம் துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடக்கத்தில் உமாராஜி என்பவர்,இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என புகார் அளித்தார்.சரியாக குடிநீர் வருவதில்லை என்றும் அதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என்றும் தொடக்கப்பள்ளிகள் அமைத்துத்தர வேண்டுகோள் விடுத்தார் .மழைக் காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றார்
இப்பகுதியில்ரேஷன் கடைகளை சரியாக முறையில் பயன்படவில்லை. அரிசி மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அனைத்து பொருட்களும் மாதம் தோறும் வழங்குவதில்லை என்ன புகார் அளித்தார்
காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தெரிவித்தது
பின்னர் மக்களின் குறைகளை கேட்டறிந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அவர்கள், ரேஷன் கடைகளில் எடை இயந்திரம் எனது சொந்த நிதியில் மூலம் வாங்கித் தருகிறேன். எனவும் அங்கன்வாடி கட்டிடம் நகராட்சி மூலம் சரி செய்து கட்டித்தரப்படும்.
என்றும் நியாய விலைக் கடையில் இன்றே அதிகாரிகள் குழுஆய்வு செய்ய செய்து நல்ல அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மக்களுக்கு விவரித்தார். அதுபோல பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவுக்கு சாலை அமைத்துத்தர மேற்பட்ட குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.