இராமநாதபுரம் மாவட்டத்தில் “தமிழ் நிலம் கணினி திருத்தம்” தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளான “0”பட்டா, புல எண்கள் விடுபட்ட இனங்கள், கணினியில் வகைப்பாடு தவறாக பதிவாகி உள்ள இனங்கள், விஸ்தீரணப்பிழை, புல எண்கள் தவறாக மாறியுள்ள இனங்கள், பெயர் திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் போன்ற திருத்தங்களுக்கு தீர்வு காணும் வகையில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் 04.07.2023 முதல் 08.07.2023 வரை அனைத்து உள்வட்ட தலைமை இடங்களிலும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் நடத்திட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, வருவாய் வட்டாட்சியர்களை ஒருங்கிணைப்பாளர்களாகவும், வருவாய் கோட்டாட்சியர்/உதவி ஆட்சியரை கண்காணிப்பாளராவும் கொண்டு நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 04.07.2023 முதல் 08.07.2023 வரை கணினி திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்
- இராமநாதபுரம் -தேவிபட்டிணம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,
- மண்டபம்- பெருங்குளம்- தேவிபட்டிணம்-வட்டாட்சியர் அலுவலகம்,
- இராமேஸ்வரம்- வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மண்டபம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பெருங்குளம்
- இராமேஸ்வரம் – கீழக்கரை லெட்சுமிபுரம் சமுதாய கூடம், காஞ்சிரங்குடி.
- திருப்புல்லாணி- வெள்ளையன் சத்திரம்,திருபுல்லாணி.
- திருஉத்திரகோசமங்கை – சமுதாய கூடம், திருஉத்திரகோசமங்கை.
04.07.2023 முதல் 08.07.2023
- திருவாடானை – வட்டாட்சியர் அலுவலகம், திருவாடானை.
- மங்களக்குடி – வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மங்களக்குடி
- புல்லூர்- வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,
- புலியூர் – வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தொண்டி.
- இராஜசிங்கமங்களம்-வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,
- இராஜசிங்கமங்களம். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,சோழந்தூார்.
- ஆனந்தூர் – கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆனந்தூர் வட்டாட்சியர் அலுவலகம், பரமக்குடி.
- பரமக்குடி – “போகலூர்”வருவாய் ஆய்வாளர்.அலுவலகம், போகலூர்
- மஞ்சூர் – வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மஞ்சூர் பரமக்குடி
- பர்த்திபனூர் – வருவாய் ஆய்வாளர் அலுவலகம், |பார்த்திபனூர் இ-சேவை மையம்,பாண்டியூர்,
- கிளியூர் – நயினார் கோவில் இ-சேவை மையம், நையினார்கோவில்,
- முதுகுளத்தூர்(வடக்கு) – கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,
- மேலமுதுகுளத்தூர் – முதுகுளத்தூர் முதுகுளத்துார்(தெற்கு)- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,
- கீழமுதுகுளத்துார் – தேரிருவேலி காக்கூடர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,தேரிருவேலி,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,
04.07.2023 முதல்08.07.2023
- காக்கூடர் கிராம – சமுதாய கூடம், சாம்பக்குளம்
- கீழத்தூவல் – மேலக்கொடுமலூர் கிராம இ-சேவை மையம்,அலுவலகம், மேஸக்கொடுமலூர்.
- கமுதி (கிழக்கு) – வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,கமுதி. ஆய்வாளர்
- கமுதி (மேற்கு) – வருவாய் அலுவலகம்,
- கமுதி – வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,
- அபிராமம் – கோவிலாங்குளம் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், புதுக்கோட்டை குரூப்.
- பெருநாழி – நூலக கட்டிடம், பெருநாழி.
- கடலாடி – வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,
- கடலாடி – வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,எம்.தரைக்குடி.
- எஸ்.தரைக்குடி – கடலாடி ஆப்பனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஆப்பனூர்,
04.07.2023 முதல் 08.07.2023
- மேலச்செல்வனூர் – வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மேலச்செல்வனூர்,
- சாயல்குடி – வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சாயல்குடி
- சிக்கம் – வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சிக்கல்,
பொதுமக்கள் தமிழ்நிலத்தில் காணப்படும் மேற்கண்ட கணினி திருத்தக் கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மேற்படி முகாமில் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தெரிவித்துள்ளார்.