இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் கமுதி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நிதியாண்டில் போது அமைக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள இடையங்குளம் என்ற கிராமத்தில் நிதியாண்டில் போது ரூ.8 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறுடன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஆழ்துளைக்கிணற்றில் நீரூற்றுவற்றிய காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் சேமிக்கவில்லை இதனால், அந்தத் தொட்டி பயன்படுத்தவில்லை
கிராம மக்களின் கோரிக்கை
இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்து இடிந்து காணப்படுகிறது. தொட்டியின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் அருகே இடையங்குளம் ஊராட்சி அமைத்த குடிநீர் குழாய் உள்ளது. இங்கு தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு சேதமடைந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.