Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் குறைகளை தீர்க்க நடவடிக்கை

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் குறைகளை தீர்க்க நடவடிக்கை

தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜூலை- 2023ம் மாதத்தில் 08.07.2023 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம்,

  • இராமநாதபுரம் வட்டம் சித்தூர் (நியாயவிலைக்கடை)
  • இராமேஸ்வரம் வட்டம் – பாம்பன் (கிராம நிருவாக அலுவலர் அலுவலகம்
  • திருவாடானை வட்டம் – வட்டாணம் (நியாய விலைக்கடை)
  • பரமக்குடி வட்டம் – கஞ்சியேந்தல் (நியாய விலைக்கடை)
  • முதுகுளத்தூர் வட்டம் – இளம்செம்பூர் (நியாயவிலைக்கடை)
  • கடலாடி வட்டம் – மூக்கையூர் (நியாயவிலைக்கடை)
  • கமுதி வட்டம்- அச்சங்குளம் (நியாயவிலைக்கடை)
  • கீழக்கரை வட்டம்- கீழ்தில்லையேந்தல் (மருதம்தோப்பு நகர்வு நியாயவிலைக்கடை)
  • ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஓடக்கரை (நியாயவிலைக் கடை)

ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் நியாயவிலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர் வரும் 08.07.2023 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments