இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 36 பேர் மனு அளித்தனர்.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் 36 மனுக்களை அளித்தனர். மனுவை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர், அந்தந்தக் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட அதிகாரி களை அழைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் புகார்களை பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீது வழங்க வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.