திருப்புல்லாணி ஊராட்சியில் பொதுமக்கள் உறுதிமொழி மேற்கொள்ளும் நிகழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி உறுதிமொழி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசமைப்பு தினத்தையொட்டி,
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தலைமையேற்று இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்ச்சியில் இந்திய அரசமைப்பு பேரவையில், 1949 உருவாக்கப்பட்ட அரசமைப்பினை ஏற்று அதை போற்றும் விதமாக பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
ஒன்றியக் குழுத்தலைவர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருபுல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜேந்திரன், கணேஷ் பாபு, திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திர மாலா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.