- புரட்டாசி மாதம் என்னென்ன செய்யலாம்
அதற்கு முன் ஸ்ரீமந் நாராயணன் யார் என்றும் அவருக்கு பிடித்தவை என்ன என்றும் பார்ப்போமா !
ஸ்ரீமந் நாராயணன் – காக்கும் கடவுள்
மும்மூர்த்திகளில் ஒருவர்
ஸ்ரீமஹா விஷ்ணு – த்வைதம் மற்றும் வைணவ நெறிகளின் தலைவர்.
- வேறுபெயர்கள்
மஹா விஷ்ணு, பரமாத்மா, வேணுகோபாலன், ஸ்ரீராமபிரான், ஸ்ரீஅரங்கநாதர், வேங்கடவன், கோவிந்தராஜன், வெங்கடேசப் பெருமாள், சீனிவாசன் என ஆயிரம் ஆயிரமாக சொல்லி கொண்டே போகலாம்.
திருமாலின் ஆயிரம் பெயர்கள் .
(விஷ்ணு சஹஸ்ரநாமம்)
- உகந்த நாட்கள்
புதன் மற்றும் சனிக்கிழமை சிறப்பு.எந்நாளும் வழிபடலாம்.
- உகந்த மலர்கள்
தாமரை, மருக்கொழுந்து, பவளமல்லி,துளசி அதி சிறப்பு.ஆயுதம் – சங்கு , சக்கரம் , மற்றும் கதாயுதம் ,பஞ்சாயுதங்களை கொண்டவராகவும்,பாற்கடலில் தோன்றிய பார்கவியை பரந்தாமன் மணந்ததால், தன் மாமனார் கடலரசனை கண்டு நீராடும் நாளாகும்.
- புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரதன்று வாமன அவதாரம்.
- புரட்டாசி துவிதியை திதியன்று பலராமன் அவதாரம்,
- புரட்டாசி மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி தேவி அவதாரம்.
- சூரியன் கன்யாராசியில் பிரவேசிப்பதால் இம்மாதம் கன்யா மாதம் எனப்படும்.
- புரட்டாசி சனியன்று சனீஸ்வரன் அவதாரம்.
- புரட்டாசி பௌர்ணமியில் சிவன் த்ரிபுரம் எரித்தார்.
- திருப்பதியில் புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் பிரமோற்சவத்தை பிரம்ம தேவன் முன்னின்று நடத்தி வழிபடுகிறார் என்கின்றது ப்ரம்ஹ வைவர்த்த புராணம்.
நாராயணனின் கல்யாண குணநலன்கள்
திருமாலின் கல்யாண குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,..
- வத்சல்யம் – தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
- சுவாமித்துவம் – கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
- சௌசீல்யம் – ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
- சௌலப்யம் – கடவுளின் எளிமையை குறிப்பது.
இந்த நான்கு குணங்களும் திருமாலுடைய ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது.
- அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய திருமாலே மனித உருவெடுத்து அவதரித்தமை சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.
- வணங்கும்முறை- கோவிலுக்கு வெளியில் உள்ள சிறிய திருவடியை-ஹனுமன் அல்லது கருடனை வணங்கவும்.
- புராதனக் கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கவும்.
- ஆழ்வார்கள், ஆச்சாரியர்களை வணங்கவும். எல்லா சன்னதிகளிலும் அனுக்கிரகம் பெற்று தாயார் சன்னதிக்கு வெளியில் உள்ள துவார பாலகிகளைச் சேவித்து அனுமதியுடன் தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து அல்லது வணங்கி மூலவரான பெருமாளின் எதிரில் உள்ள கருடாழ்வார் துவாரக பாலகர்களை வணங்கி அவர்களின் அனுமதியுடன் மூலவரான பெருமாளைத் தரிசிக்கவும்.
- இறைவனுக்கு நைவேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நெய்வேத்தியப் பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்கவும்.
- நின்ற, இருந்த, கிடந்த ஆகிய எந்த கோலத்தில் இருந்தாலும் பாதத்திலிருந்து சேவித்து முகத் தரிசனம் செய்யவும்.
- அர்ச்சகர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும்.
- அர்ச்சனை ஆரத்தி முடிந்தபின் துளசி, தீர்த்தம் பெற்று வரவும். அருள் நிறைந்துள்ள பெருமாள்
- கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து ஸ்துதிகள் அல்லது நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.
- அப்படி செய்தால் தாயார் நம்முடனே வீட்டிற்கு வருவார்.முடிந்த வரை அமங்கள வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.