சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது.
முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதன் முதல் தோற்ற போஸ்டர் ஏப்ரல் மாதம் வெளியானது. அதில், கழுத்தில் எலுமிச்சை மாலை, காதுகளில் கம்மல், கைகளில் வளையல், புடவை அணிந்து பெண் தெய்வம் போல் காட்சியளிக்கிறார் அல்லு அர்ஜுன்.
இந்த போஸ்டர் இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனைப் படைத்துள்ளது. அதாவது 70 லட்சம் லைக்ஸ் பெற்றுள்ளது. இவ்வளவு லைக்ஸ் பெற்ற முதல் இந்திய திரைப்படம் இதுதான் என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.