ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதை அடுத்து அவர் லைகா தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க இருக்கிறார்.
ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினியும் மற்றொரு படத்தை ‘டான்’ சிபி சக்கரவர்த்தியும் இயக்குகின்றனர். இந்தப் படங்களின் அறிவிப்பு, நவம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், லைகா தலைவர் சுபாஷ்கரன், தலைமை நிர்வாகி தமிழ்க்குமரன், துணைத் தலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் ரஜினியை நேற்று சந்தித்துப் பேசினர்.