தொழிலாளர் மற்றும் ஜவுளி திறன் மேம்பாட்டு குழு உறுப்பினராக ராஜ்யசபாஎம்.பி தர்மர் நியமனம்
ராஜ்யசபா எம்.பி தர்மருக்கு தொழிலாளர் ஜவுளி திறன் மேம்பாட்டு குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளனர். கடந்த மே மாதம் நடந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் தர்மர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இந்த நிலையில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த தர்மருக்கு தொழிலாளர் ஜவுளி திறன் மேம்பாட்டு துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கியது மத்தியில் ஆளக்கூடிய பி.ஜே.பி அரசு. தற்போது அ.தி.மு.க.வில் நிலவி வரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த எம்.பி தர்மருக்கு பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த தொழிலாளர் ஜவுளி திறன் மேம்பாட்டு குழு கூட்டத்தில் உறுப்பினராக அ.தி.மு.க சார்பில் எம்.பி தர்மர் கலந்து கொண்டர்.