Wednesday, March 22, 2023
Homeராமநாதபுரம்இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் தெரிவித்த செய்தி குறிப்பில்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் தெரிவித்த செய்தி குறிப்பில்

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் 30.10.2022 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழா நடைபெற்றது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் காலணிகளை விட்டுச் செல்லும் பொதுமக்கள் தரிசனம் முடிந்து திரும்ப எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்தாமண்டு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கனின் காலணிகளை முன்பக்கம் விட்டு சென்று விட்டு நினைவிடத்தில் தரிசனம் முடிந்து பின்பக்கம் வாசல் வழியாக காலணிகளை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

அத்தியாவசிய அலுவலகப்பணி காரணமாக இந்தாண்டு இதற்கான பணிகள் மேற்கொள்ளவில்லை. முக்கிய பிரமுகர்களின் காலணிகளை பாதுகாக்க காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகப் பணியாளர்கள் பணி மேற்கொண்டதாக தவறான செய்திகள் வெளிவந்துள்ளது.

இத்தகைய செய்தி முற்றிலும் தவறாகும். பொதுமக்களுக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ காலணிகளை பாதுகாக்க காவல்துறையினரையோ, வருவாய்த்துறையினரையோ, பேரூராட்சிதுறையினரையோ பணி நியமிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments