இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குப்பானி வலசை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குப்பானி வலசை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோருடன் இணைந்து துவக்கி வைத்த போது…
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ,மண்டபம் ஒன்றியக்குழு தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் மற்றும் பலர் பங்கேற்றனர்.