Tuesday, January 13, 2026
Google search engine
Homeசெய்திகள்இராமநாதபுரம் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

மாவட்டக் கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் வரும் ஜன.11 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணி அளவில் பரமக்குடி, ஏ.பி.ஷா மகாலில் மாவட்ட அவைத்தலைவர் வ.சத்தியமூர்த்தி  தலைமையில் ஜனவரி 17 அன்று தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் மு‌.க.ஸ்டாலின் வருவதை முன்னிட்டு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மண்டல தேர்தல் பொறுப்பாளர்  நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர், கழக தேர்தல் பணிக் குழு தலைவர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன், மாவட்டக் கழக பொருளாளர் செ.முருகேசன் எம்.எல்.ஏ தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கொடி சந்திரசேகர் (பரமக்குடி தொகுதி பார்வையாளர்), மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் அருண் (திருவாடனை தொகுதி பார்வையாளர்), புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் எஸ்.சுதர்சன் (இராமநாதபுரம் தொகுதி பார்வையாளர்), விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் (முதுகுளத்தூர் தொகுதி பார்வையாளர்) ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஆகவே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கிளைக் கழக, வார்டு கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலைக்குழு முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments