இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை வழங்கினார்.
முதல்வர் உத்தரவு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இராமநாதபுரம் மண்டலத்தில் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.
சத்துணவுத் திட்டம்
தமிழ்நாடு அரசு செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களான அயோடின் உப்பு மற்றும் பாமாயில் பொது விநியோக திட்டத்திற்கு வழங்கி வருகின்றது. சத்துணவுத் திட்டம் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் கலந்த உப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நமது ராமநாதபுரம் மாவட்டத்தினை Aspiration மாவட்டமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 2022 மாதத்திலிருந்து பொது விநியோகத் திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசியும் வழங்கப்படுகிறது.
கழுத்து கழலை நோய்
அயோடின் சத்துக்குறைவால் பொது மக்களுக்கு காய்டர் என்ற சொல்லக்கூடிய முன் கழுத்து கழலை நோய் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற அயன் மற்றும் அயோடின் சாப்பிடும் உப்பில் கலந்து செறிவூட்டப்பட்ட உப்பாக அங்கன்வாடி மையம், சத்துணவு மையங்களுக்கு மற்றும் பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்குவதால் அயோடின் சத்து தேவைக்கேற்ப உள்ளதால் கழுத்து கழலை நோயினை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட பாமாயில் வழங்கப்படுகிறது.
கண்நோய், தோல் நோய்
இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் D சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.
தற்போது தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.
ஊட்டச்சத்து உணவுகள்
ஏழை எளிய மக்களால் வைட்டமின் மற்றும் நுண் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வாங்க பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், சாதாரண அரிசியில் வைட்டமின்கள் (B1, B2, B12) போலிக் அமிலம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களை கலந்து “செறிவூட்டல்”என்றும் சத்தான அரிசியினை வழங்குகிறது.
“பொது விநியோகத்திட்டத்தால் வழங்கப்படுகின்ற செறிவூட்டல் உணவுப்பொருட்கள் உண்போம்”
“வலுவான உடல் உறுதியினைப் பெற்று நோய்களிலிருந்து நம்மைக் காப்போம்”
உடல் ஆரோக்கியம்
இன்று முதல் மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளார் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.