இராமநாதபுரம் அருகே பேருந்து ஓட்டுநரைத்தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்து அலுவலகத்தின் முன் தர்னாவில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகம் நகர்க் கிளையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் முருகேசன் என்பவர் . இவர் இராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு செல்லும் பேருந்தை செவ்வாய்க்கிழமை இயக்கினார். இதில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த அவர்களை ஓட்டுநர், பேருந்துக்குள்ளே வருமாறு இதைத்தொடர்ந்து, இரவு மீண்டும் அந்த பேருந்து அதே வழித்தடத்தில் சென்ற போது 7 பேர் கும்பல் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ரெகுநாதபுரத்தில் சாலையை வழிமறித்து நின்ற கும்பல் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது. இந்த இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி புகார் கிளை போக்குவரத்து ஊழியர்கள், புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் 57 பேருந்துகளை இயக்காமல், கிளையின் நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து, அங்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரி பத்மநாதன், இராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், அப்போது, ஓட்டுநர்களைத் தாக்கியவர்கள் செய்யப்படுவர் உறுதி அளித்தனர்.இதைத்தொடர்ந்த அவர்கள் தர்னாவை கைவிட்டு காலை 6.20 மணி முதல் பேருந்துகளை இயக்கினர்.