ராமநாதபுரத்தில் உள்ள பெரிய கண்மாயில் உபரி நீர் கலப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கண்மாய் வழியாக கடலில் உபரி நீர் கலந்து கடல் நீர் வீணாகிறது.வைகை அணையில் இருந்து வரும் உபரி நீரானது முறையாக திட்டமிடாத காரணத்தினால் கடல் நீர் கலக்கின்றது.
விவசாயிகளின் கோரிக்கை
ராமநாதபுரம் வைகை அணையில் இருந்து உபரி நீர் முறையாக திட்டமிடாத காரணத்தினால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக கடலில் கலந்து வீணாகிறது.வைகை அணையில் இருந்து வரும் உபரி நீரானது. கடல் நீரின் கலப்பதால் கடல் நீர் மட்டம் உயர்கின்றது. இந்த நீரை கடலை சுற்றியுள்ள கண்மாய்களுக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
70 அடி தண்ணீர் வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி என்ற நிலையில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது மீண்டும் 70 அடியை எட்டி உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி உள்வரும் அனைத்து நீரையும் வெளியேற்றி வருகின்றனர். அதனை சுற்றியுள்ள கண்மாய்களுக்கு நீர் நிரப்பினால் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது
உபரிநீர் வந்து கொண்டிருக்கும் வேளையில் பாதுகாப்பு கருதியும், வழிப்பாதைகள் தன்மை கருதியும் அதில் கண்மாய்க்கு ஆயிரம் கனஅடி அளவில்தான் திருப்பி கொண்டு செல்ல முடியும். அதற்குமேல் கொண்டு செல்ல முடியாது. அதன் வழி வரும் கண்மாய்களில் முக்கால் கொள்ளளவை எட்டிய கண்மாய்கள் அடைத்து தண்ணீரை முழுமையாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம்.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டதால் குறைந்த சுமார் முக்கால் அடி தண்ணீரை தற்போது கொண்டு சென்றதன் மூலம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இதனை தொடர்ந்து மீதம் உள்ள தண்ணீரை காவனூர் வழியாக புல்லங்குடி, தொருவளூர், அம்மாரி கண்மாய்களுக்கு கொண்டு செல்லபடும் என அறிவிக்கப்பட்டது