Sunday, February 25, 2024
Homeஅறிந்து கொள்வோம்ராமநாதபுரம் சுற்றுலா தலங்கள்

ராமநாதபுரம் சுற்றுலா தலங்கள்

ராமநாதபுரம் சுற்றுலா தலங்கள்

ராவணனை வதம் செய்து திரும்பிய ராமர் தான் செய்த பாவத்தைக் கழிக்க ராமநாதபுரத்தின் ஒரு கடற்கரைப் பகுதியில் மணலால் சிவ பெருமானின் லிங்கத்தை உருவாக்கினார். அந்த இடம்தான் ராமேஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

15ம் நூற்றாண்டின் பிற்பாதியில் பாண்டியர்கள் ஆண்ட இந்த பகுதி நாளடைவில் சேதுபதி மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஆகியது.

இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் ராம்நாடு என்று அழைக்கத் தொடங்கி அதுவே ராமநாதபுரம் என்று மாவட்டத்துக்கே பெயரிடப்பட்டது. வரலாற்றையும், ஆன்மீகத்தையும் ஒரே சேர கலந்து இராமநாதபுரத்தின் சுற்றுலா தகவல்களைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ராமநாதபுரத்தின் ஆன்மீக பகுதிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக முக்கிய ஆன்மீக தலம் என்றால் அது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் என்பது அனைவரும் அறிந்ததே.

அதைப் போலவே அக்னி தீர்த்தம், உத்தரகோசமங்கை, ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி, தேவிப் பட்டினம், ஜடாயு தீர்த்தம், ஜோதி லிங்கம், வில்லுண்டி தீர்த்தம், பத்ரகாளியம்மன் கோயில் ஆகிய ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.

ராமேஸ்வரம் ராம நாத சுவாமி கோவில்

*ராமநாத புரம் என்றாலே ராம நாத சுவாமி கோவில் தான். அந்த அளவுக்கு இந்த இடம் புண்ணிய பூமியாக அறியப்படுகிறது. ராம நாத சுவாமி கோவில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் என்னதான் மாவட்டத் தலைநகர் ராமநாத புறம் இருந்தாலும், ராமேஸ்வரம் நகரில் உலக பிரசித்தி பெற்றதாகும்.

சிறப்புகள்

*ராமேஸ்வரம் வரலாற்று தொடர்புடையதும், ஆன்மீகத் தொடர்பு கொண்டதுமான புண்ணிய பூமியா வணங்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ராமநாதசுவாமி கோவில்.

*ராம நாத சுவாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான இந்திய பயணிகள், ஆயிரங்களில் வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.

*ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்று.

*ராம நாத சுவாமி கோவிலில் தனியாக சிலை இல்லை. இங்கு சிவ பெருமான் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

*ராம நாத சுவாமி கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைக்கு சொந்தமானது.

எப்படி அடைவது

*சென்னை, கோவை, கன்னியாகுமரி என மூன்று புறங்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு செல்லும் ரயில்களும், பேருந்து சேவைகள் இருக்கின்றன.

*சென்னை மற்றும் கோவையிலிருந்து விமானத்தில் வர நினைப்பவர்கள் தூத்துக்குடி, அல்லது மதுரைக்கு வந்து அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மீண்டும் பயணிக்க வேண்டும்.

*மதுரையிலிருந்து ராமேஸ்வரம் தொலைவு – 172கிமீ

*பயண நேரம் – 3 முதல் 4 மணிகள்

நம்பு நாயகி அம்மன் கோவில்

சிறப்புகள்:

*ராம நாத சுவாமிக்கு அடுத்து புகழ் பெற்ற கோவில் நம்பு நாயகி அம்மன் கோவில்

*தசரா விழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

*நம்பு நாயகி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள இடத்தில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது சுற்றுலாப் பயணிகள் இளைப்பாற வசதியாக இருக்கிறது.

எப்படி செல்வது

*ராமேஸ்வரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 87 வழியாக தனுஷ்கோடியை நோக்கிய பயணிக்கும்போது 3 கிமீ தொலைவிலேயே நம்பு நாயகி அம்மன் கோவில் தெரு வருகிறது. அதில் நுழைந்தால் கோவிலை எளிதில் அடையலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் – ராமேஸ்வரம்

*அருகிலுள்ள விமான நிலையம் – மதுரை

அக்னி தீர்த்தம்

*ராம நாத சுவாமி கோவிலுக்கு வெளியில் இருக்கும் முதல் தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆகும்.

*அக்னி தீர்த்தம் கடலுக்கு மிக அருகிலேயே உள்ளது. இது ராமர் குளித்த தீர்த்தம் என்று நம்பப்படுகிறது.

*அக்னி தீர்த்தத்தில் குளித்தால் நீங்கள் இதுவரையில் செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என நம்பப்படுகிறது.

உத்திர கோச மங்கை

*இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் சிவ பெருமானுக்கான கோவிலான உத்திரகோசமங்கை ஒவ்வொரு வருடமும் சைவப்பிரிவினை சேர்ந்தவர்களை பெருமளவில் வரவழைக்கும் சுற்றுலா தலமாகும்.

*உத்திர கோச மங்கை கோவிலை பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து எளிதில் அடைய முடியும். சேது மாதவ தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் மற்றும் இராமநாதபுரம் போலவே இந்த புனிதத்தலமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* உத்திர கோச மங்கை கோவில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களால் மிகவும் போற்றப்படும் இடமாக விளங்குகிறது. இந்த கோவில் வளாகத்தில் மிகவும் பழமையான மரகத நடராஜர் சிலை ஒன்றும் உள்ளது.

*இந்த நடராஜர் சிலையின் சிறப்பு அது முழுமையும் மரகதத்தால் செய்யப்பட்டிருப்பது தான். ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் ஆருத்ரா திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

*இந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலான சிவ பக்தர்கள் இங்கு வந்திருந்த, கடவுளின் அருள் பெற்று வருகிறார்கள். மேலும், சுற்றுலாப் பயணிகள் கூட இந்த காலகட்டங்களில் நடக்கும் விழாக்கோலம் அனுபவிக்க இங்கு வருவார்கள்.

கோதண்ட ராமர் கோவில்
*இராமேஸ்வரத்திலுள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மத முக்கியத்துவம் இரண்டையும் ஒருங்கே பெற்ற புனிதத் தலமாகும்.

*இந்த இடத்தில் தான் இராவணனின் தம்பியும், இராவணனை கொன்ற பின்னர் இலங்கையின் மன்னனாகவும் இருந்த இருந்த விபீஷணனுக்கு ராமர் ஆறுதல் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

*இந்த நிகழ்வுக்கு சான்றாக இக்கோவில் சுவற்றிலிருக்கும் ஓவியத்தை சொல்லலாம்.

எப்படி அடைவது

*ராமஸ்வரத்திலிருந்து தனுஷ் கோடி செல்லும் வழியில் 10 கிமீ தொலைவில் தனுஷ்கோடியை ஒட்டியே இந்த இடமும் அமைந்துள்ளது.

*கோதண்டராமர் கோவிலில் இருந்து நடந்தே தனுஷ்கோடி பீச்சுக்கு சென்றுவிட முடியும்.

காந்தமதனா பர்வதம்

*காந்தமதனா பர்வதம் என்பது இராமநாதசுவாமி கோவிலிற்கு வீட்டில் உள்ள சிறிய மலைப் பகுதியாகும். 3 கிமீ தொலைவில், நடந்து சென்று அடைய கூடிய வகையில் உள்ள இந்த இடம், இராமேஸ்வரத்தின் மிகவும் உயரமான இடமாகும்.

*காந்தமதனா மலையின் உச்சியில் ராமர் பாதம் என்றழைக்கப்படும் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இந்த கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் உள்ள ஒரு இரண்டடுக்கு வளாகத்தில், இராமருடைய பாதம் ஒரு சக்கரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

*காந்தமதனா மலைக்கு செல்லும் வழியில் உள்ள கோவில் உள்ள இடத்தில் தான், இராவணன் சீதையை இலங்கைக்கு கடத்தி சென்ற போது தடயத்திற்காக சீதை எறிந்த அணிகலனை அவரைத் தேடி வந்த ஹனுமான் கண்டெடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.

*இராமேஸ்வரம் தீவின் மனம் மயக்கும், கம்பீரமான தோற்றத்தைக் காட்ட வல்ல இந்த தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள்.

எப்படி செய்வது

*ராமநாதசுவாமி கோவிலுக்கு வடக்கு திசையில் நடந்து சென்றால் 2 கி மீ தூரத்தில் கந்தமாதன பர்வதம் வருகிறது. இது மலை ஏற்றத்துக்கு உரிய ஒரு சிறிய பகுதி ஆகும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

*ஐந்து முகங்களையுடைய அனுமான் கோவில் இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் இற்குப் பின்னர் மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.

*பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இராமர், அவருடைய துணைவியார் சீதா தேவி மற்றும் அனுமனின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

*பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலின் மற்றுமொரு முக்கிய அம்சம் இந்த கோவிலுக்கு வெளியில் இருக்கும் மிதக்கும் கல்லாகும்.

*இராவணன் வசித்து வந்த இலங்கை செல்வதற்காக அனுமான் மற்றும் பிற வானர ராணுவ வீரர்களால் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதியாகவே இந்த கல் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

*அனுமான் தன்னுடைய ஐந்து முகங்கள் அல்லது ஐந்து வித வடிவங்களையும் காட்டிய இடம் இந்த இடம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்குதான், ராமன் அனுமனுக்கு செந்தூர பொட்டு வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

சாட்சி அனுமான் கோவில்

*புராணங்களின் படி, அனுமான் தான் சீதாவைக் கண்டுபிடித்த நல்ல செய்தியை இவ்விடத்தில் வைத்து தான் இராமரிடம் சொன்னார்.

இந்த இடத்தில் அனுமான் தான் கொண்டு வந்திருந்த ‘சாட்சிகளான சீதா தேவியின் சூடாமணி அல்லது ஆபரணங்களை வைத்து இந்த செய்தியை இராமரிடம் கூறினார். மேலும், இந்த செய்தியை கேள்விப்பட்டு ராமர் தன்னுடைய மனைவி உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியால் அழுததாகவும் நம்பப்படுகிறது.

*இந்த இடத்தில் தான், கடுமையான சோதனைகள் மற்றும் துன்பங்களுக்கிடையில் சீதாவை கண்டறிந்து வரச் சென்ற அனுமான் தன்னுடைய உண்மையான ‘பக்தர்’ என ராமர் கூறினார். இந்த கோவிலுக்கு ராமர் மற்றும் அனுமன் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து செல்வார்கள்.

*பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் இங்கு இறங்கி உங்களுடைய பிரார்த்தனைகளை நடத்திச் செல்கின்றனர். அனுமானை வழிபடுவதற்கு சிறந்த நாளாக கருதப்படும் செவ்வாய் கிழமைகளில், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

எங்கு உள்ளது

*இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவிலேயே, கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் சாட்சி அனுமன் கோயில் உள்ளது.

அரியமான் கடற்கரை

*சுற்றுலா வருவதை மட்டுமே பொழுது போக்காக கொண்டிருக்கும் ராமேஸ்வரம் பகுதி மக்களில் பெரும்பாலானோர் அடிக்கடி வந்து செல்லும் கடற்கரையாக இது உள்ளது.

*அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் தங்களுடைய வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வரும் கடற்கரையாகும் அரியமான் கடற்கரை உள்ளது. நீலக் கடல் நீர் மின்னுவதாகவும், நாள் முழுவதும் அமைதியாகவும் இருக்கக் கூடிய அழகிய கடற்கரைகள் அரியமான் கடற்கரை உள்ளது.

*நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இராமநாதசுவாமி கோவிலில் இருந்து 27 கி மீ தொலைவில் உள்ள இந்த கடற்கரை 150 மீ அகலமும், 2 கி மீ நீளமும் உடையதாகும்.

*அரியமான் கடற்ரையின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு தனியார் கட்டுமான நிறுவன, சவுக்கு மரங்களை கடற்கரையில் பட்டுள்ளார். மேலும் குழந்தைகள் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி, செயற்கை இடி மின்னல், நீர்ச்சறுக்கு மற்றும் இதர விளையாட்டுகளையும் இங்கு ஏற்படுத்தியுள்ளார்.

*சுற்றுலா செல்பவர்களின் சுற்றுப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிடவே இந்த வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

ராமலிங்க விலாஸ் அரண்மனை

*கிழவன் சேதுபதி என்பவர் வாழ்ந்த அரண்மனை ராமலிங்க விலாஸ் ஆகும்.

*ராமலிங்க விலாஸ் அரண்மனையில் கூடி மக்கள் தங்கள் சிக்கல்களை கூற மன்னர் அவற்றை தீர்க்க முயற்சிப்பார் என்று கூறுகிறார்கள்.

*அரண்மனை சுவர்களில் அழகழகான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இவை மன்னரின் குடும்ப வாழ்க்கையை சித்தரிக்கின்றன.

எப்படி செல்வது

*ராமநாதபுரம் முகவாய் ஊரணிக்கு அருகே, சாலைத் தெருவுக்கு முன் லக்ஷ்மி புரம் பகுதியில் அமைந்துள்ளது ராமலிங்க விலாஸ் எனும் அழகிய அரண்மனை.

*வாடகை வண்டிகள், ஆட்டோ எனப்படும் தானிக்கள் உட்பட போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.

பாம்பன் பாலம்

பல பாடல்கள், சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் பாம்பன் பாலம் குறித்த தகவல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்..

நீர் பறவை சரணாலயம்

*இராமநாதபுரத்தில் உள்ள நீர்ப் பறவை சரணாலயம் எல்லா பறவை பிரியர்களையும் கவரும் சரணாலயமாகும்.

*நீர் பறவை சரணாலயத்தில் உள்ளூர் மற்றும் இடம் பெயரும் வகை பறவைகள் பலவற்றையும் காண முடியும். இங்கு காணப்படும் உள்ளூர் பறவைகள் வருடம் முழுவதுமே உணவிற்காக இந்த சரணாலயத்திற்கு வருகை தரும்.

*ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இடம் பெயரும் பறவைகள் பெருமளவில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன. வழக்கமாக இந்த பறவைகள் வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் இங்கு வருகை தருகின்றன.

*நீர் பறவை சரணாலயத்தில் அரியவகை மற்றும் தனித்தன்மையான பறவைகளை நீங்கள் காண முடியும். உலகம் முழுவதும் உள்ள பறவை பிரியர்கள் குறிப்பிட்ட காலங்களில் இங்கு வந்து தங்கி இங்கிருக்கும் பறவைகளின் குணாதிசயங்கள் கவனித்து செல்கின்றனர்.

*பறவைகள் தங்களுக்கு பிடித்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு வந்து செல்லும். அந்த இடங்களை அங்குள்ள அதிகாரிகள் சுற்றுலா வசதிக்காக குறிப்பிட்டு வைத்திருப்பார்கள். நாம் அதன் மூலம் எளிதாக பறவைகளை அடையாளம் காணமுடியும்.

*இந்த இடங்களில் தான் பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும். இந்த சரணாலயத்துக்கு வரும் போது உங்களுடைய பைனாகுலர் களை மறவாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.

எப்போது செல்லலாம்

*பறவைகள் சரணாலயத்தில் வழக்கமாக அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெருவாரியான பறவைகள் வந்து குவியும். எனவே அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் இங்கு சுற்றுலா செல்பவர்கள் பறவைகளையும் கண்டு ரசிக்க முடியும்.

தனுஷ்கோடி

ராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி கிராமம் (தற்போது நகரமாக வளர்ந்து வருகிறது) இந்த தீவின் தெற்கு எல்லையில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இடமாகும். இலங்கையில் தலைமன்னார் பகுதியில் இருந்து சுமார் 31 கி மீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

தனுஷ்கோடி தீவின் அரிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள சொடுக்கவும்

தனுஷ்கோடி சம்பந்தமான கட்டுரைகளை இங்கு காணுங்கள்

தனுஷ்கோடி – ஒரு துயரத்தின் சாட்சி!
விரைவில் ராமேஸ்வரம் அழியப்போகிறதா? பதைபதைக்கும் அறிவியல் கூற்றுகள்
ராமேஸ்வரத்திலிருந்து இவ்வளவு அருகிலிருக்கும் இந்த தீவைப் பற்றி தெரியுமா? #தேடிப்போலாமா? 6
தனுஷ்கோடி: புயலால் சிதைந்த நகரம்

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் மணி மண்டபம்
ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பிறந்து வளர்ந்த ராமேஸ்வரத்தில் அவர் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே இடத்தில் இருக்கும் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மணி மண்டபத்தில் அரிய புகைப்படங்களும், ஓவியங்களும், ஏவுகணை மாதிரிகளும் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் அழகிய சுற்றுலாத் தளங்களை நமது இணையதளத்தில் சேர்க்க விரும்புகிறீர்களா? கீழே கமெண்டில் தெரிவியுங்கள்.

 

இதையும் படியுங்கள் || ராமநாதபுரம் மாவட்ட யூனியன் டிரைவர்கள் பணியிட மாறுதல் செய்ய வேண்டும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments