இராமநாதபுரம் இராமேசுவரம், இராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரை மாற்றக்கோரி, மக்கள் பாதுகாப்புப் பேரவை சார்பில்,பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் பாதிப்பு உள்ளாகினர்.
குற்றச்சாட்டு
மேலும், கோயில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து உள்ளதால், தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. உள்ளுர் பொதுமக்கள் தரிசனம் செய்ய செல்லும் வழக்கமான பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மிகவும் பழைமை வாய்ந்த கோயிலில் சில இடங்களை உடைத்து கட்டு மானப்பணிகளைச் செய்கிறார்.இதைக் கண்டித்து, பக்தர்கள், உள்ளுர் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இருப்பினும், இணை ஆணையர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.
மக்கள் கண்டனம் தெரிவித்தனர்
இதைக் கண்டித்தும், இணை ஆணையரை மாற்றக் கோரியும், மக்கள் பாதுகாப்புப் பேரவை சார்பில்,ராமேசுவரத்தில்திங்கள் கிழமை ஒரு நாள் முழு அடைப்பு பொது வேலைநிறுத்தம் நடை பெற்றது
இந்தப் போராட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், குறிப்பிட்ட ஆட்டோ சங்கங்கள் பங்கேற்றனர்
வேலைநிறுத்தம் காரணமாக, உணவு விடுதிகள், தேநீர் கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டதால், ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, விசைப் படகு மீனவர்களும் கடலுக்குள் செல்லவில்லை