இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 555 விசைப்படகுகளில் மீன்துறை அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
தங்கச்சிமடம் – எல்லை தாண்டி
மீனவர்கள் கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது நள்ளிரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் தங்கச்சிமடம் நாலு பனையைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான IND TN 10 MM 365 என்ற எண் கொண்ட விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளிண்டன் (31), பேதுரு (24), வினிஸ்டன் (50), தயான் (44), மரியான் (28), தாணி (24), ஆனஸ்ட் (24) ஆகிய ஏழு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
இலங்கை கடற்படை
மீனவர்களின் விசை படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மீனவர்களும், படகும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமைப் பெற்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர்.