ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமிற்கு மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினாள். நுகர்வோர் இயக்க துணைத் தலைவர் தில்லை பாக்கியம் முகாமை தொடங்கி வைத்தார். விழுதுகள் சேவை அமைப்பின் அமைப்பாளர் மோகன், கம்பன் கழக பொருளாளர் ராமச் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 7 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் தூய்மைப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாணவர்கள் மேற்கொள்கின்றனர்.