ராமேசுவரம்- மதுரை சிறப்பு ரயில்: முன்பதிவு இல்லாத ரயிலாக மாற்றம்
ராமேசுவரம் மதுரை சிறப்பு ரயில் முன்பதிவு இல்லாத ரயிலாக மாற்றப்பட்டுள் ளதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
ராமேசுவரம் மதுரை இடையே கூடுதலாக வாரம் முறை சிறப்புக் கட்டண ரயிலின் இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு வழக்கமான கட்டணமான ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு ரூ. 70, ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரூ. 55, பரமக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ. 45, மானாமதுரையில் இருந்து மதுரைக்கு ரூ.30 என வசூலிக்கப்படுகிறது. ராமேசுவரம் – மதுரை இடையேயான பேருந்துக் கட்டணம் ரூ. 150 என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் தெரிவித்தது.