ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை நடை சாத்தப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோயிலில் நாளை தரிசனத்துக்கு தடை சந்திரகிரகணத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் செவ்வாய்க்கிழமைமாலை 5.47 முதல் 6.26 வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கின்றது. அதனால் அன்றைய தினம் ராமநாத சுவாமி கோயிலில் வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மாலை4.32 மணிக்கு தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு இருக்கின்றது. மாலை 5.50 மணிக்கு அக்னி தீர்த்தவாரி நடைபெற்று வீதி உலா நடைபெறும். மாலை 6.45 மணிக்கு கோயில் நடை திறந்து கிரகணாபிஷேகம் நடைபெற்ற பிறகு பூஜைகள் நடைபெறும். இரவு 7.15 மணிக்கு நடை சாத்தும் வரையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.