Monday, February 6, 2023
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (03-12-2022)

ராசி பலன்கள் (03-12-2022)

இன்றைய நாள்(03-12-2022)

தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, கார்த்திகை 17
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ ஏகாதசி – Dec 03 05:39 AM – Dec 04 05:34 AM

சுக்ல பக்ஷ துவாதசி – Dec 04 05:34 AM – Dec 05 05:58 AM

நட்சத்திரம்

ரேவதி – Dec 03 05:45 AM – Dec 04 06:16 AM

அஸ்வினி – Dec 04 06:16 AM – Dec 05 07:15 AM

கரணம்

வனசை – Dec 03 05:39 AM – Dec 03 05:33 PM

பத்திரை – Dec 03 05:33 PM – Dec 04 05:34 AM

பவம் – Dec 04 05:34 AM – Dec 04 05:43 PM

யோகம்

வ்யதீபாதம் – Dec 03 05:50 AM – Dec 04 04:34 AM

வரியான் – Dec 04 04:34 AM – Dec 05 03:41 AM

வாரம்

சனிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:22 AM
சூரியஸ்தமம் – 5:56 PM

சந்திரௌதயம் – Dec 03 2:30 PM
சந்திராஸ்தமனம் – Dec 04 2:58 AM

*அசுபமான காலம்*

இராகு – 9:16 AM – 10:42 AM
எமகண்டம் – 1:36 PM – 3:02 PM
குளிகை – 6:22 AM – 7:49 AM

துரமுஹுர்த்தம் – 07:55 AM – 08:41 AM

தியாஜ்யம் – 03:05 AM – 04:45 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:46 AM – 12:32 PM

அமிர்த காலம் – 03:49 AM – 05:27 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:46 AM – 05:34 AM

ஆனந்ததி யோகம்

பிரபாபதி Upto – 06:16 AM
சௌமியம்

சனி ஹோரை

காலை

06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்

மாலை

03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புதன் – சுபம்

வாரசூலை

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

இன்றைய ராசிபலன்(03-12-2022)

மேஷம்முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனை மற்றும் வீடு தொடர்பான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் சோர்வு உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வரவு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

அஸ்வினி : அங்கீகாரம் கிடைக்கும்.

பரணி : பிரச்சனைகள் குறையும்.

கிருத்திகை : மேன்மை ஏற்படும்.

ரிஷபம்இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும், அறிமுகமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : நம்பிக்கை ஏற்படும்.

ரோகிணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.

மிதுனம் சிறு தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமும், புதிய வாய்ப்பும் சாதகமாக அமையும். வியாபார பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

புனர்பூசம் : ஆசைகள் மேம்படும்.

கடகம் கடன் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். செய்யும் செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த வியாபாரம் நிமிர்த்தமான பணிகளை செய்து முடிப்பீர்கள். தூரத்து உறவினர்களின் எதிர்பாராத சந்திப்பு உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : சாதகமான நாள்.

பூசம் : மாற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : இழுபறிகள் குறையும்.

சிம்மம் தந்தைவழி உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் ஏற்பட்ட எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : ஏற்ற, இறக்கமான நாள்.

உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.

கன்னி மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அஸ்தம் : மேன்மை ஏற்படும்.

சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம் கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

விருச்சிகம் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பணப்புழக்கம் உண்டாகும். புராணங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய கலை சார்ந்த முயற்சிகள் மேம்படும். விவாதங்களில் சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். மறைவாக இருந்துவந்த சில பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அறம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : விடுதலை பெறுவீர்கள்.

அனுஷம் : முயற்சிகள் மேம்படும்.

கேட்டை : ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளின் மூலம் தெளிவு ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மூலம் : மாற்றம் ஏற்படும்.

பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திராடம் : தெளிவு ஏற்படும்.

மகரம் பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் தைரியமாக முடிவு எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

உத்திராடம் : தைரியம் மேம்படும்.

திருவோணம் : திருப்திகரமான நாள்.

அவிட்டம் : உபாதைகள் குறையும்.

கும்பம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். இழுபறியான தனவரவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எண்ணிய முடிவு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அவிட்டம் : கலகலப்பான நாள்.

சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.

மீனம் விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பெருந்தன்மையாக செயல்பட்டு பலரின் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப நபர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.

உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.

ரேவதி : காலதாமதமான நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments