இன்றைய நாள்(05-12-2022)
தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, கார்த்திகை 19
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ திரயோதசி – Dec 05 05:58 AM – Dec 06 06:47 AM
நட்சத்திரம்
அஸ்வினி – Dec 04 06:16 AM – Dec 05 07:15 AM
பரணி – Dec 05 07:15 AM – Dec 06 08:38 AM
கரணம்
கௌலவம் – Dec 05 05:58 AM – Dec 05 06:19 PM
சைதுளை – Dec 05 06:19 PM – Dec 06 06:47 AM
யோகம்
பரீகம் – Dec 05 03:41 AM – Dec 06 03:07 AM
சிவம் – Dec 06 03:07 AM – Dec 07 02:52 AM
வாரம்
திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:23 AM
சூரியஸ்தமம் – 5:56 PM
சந்திரௌதயம் – Dec 05 3:53 PM
சந்திராஸ்தமனம் – Dec 06 4:35 AM
அசுபமான காலம்
இராகு – 7:50 AM – 9:16 AM
எமகண்டம் – 10:43 AM – 12:10 PM
குளிகை – 1:36 PM – 3:03 PM
துரமுஹுர்த்தம் – 12:33 PM – 01:19 PM, 02:51 PM – 03:38 PM
தியாஜ்யம் – 05:24 PM – 07:06 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:47 AM – 12:33 PM
அமிர்த காலம் – 03:34 AM – 05:15 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:47 AM – 05:35 AM
ஆனந்ததி யோகம்
ராக்ஷசம் Upto – 07:15 AM
சரம்
திங்கள் ஹோரை
காலை
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
மாலை
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
இன்றைய ராசிபலன்(05-12-2022)
மேஷம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களைக் குறை கூறுவதைத் தவிர்த்து விடவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களிடம் பேசும் பொழுது பேச்சில் கவனம் வேண்டும். எதிலும் விழிப்புடன் செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரிஷபம் வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாகக் குறையும். பெரிய மனிதர்களின் நட்பு மனதளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
கிருத்திகை : முடிவு கிடைக்கும்.
ரோகிணி : மந்தத்தன்மை குறையும்.
மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.
மிதுனம் விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டார நட்பு மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் நுட்பமாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாழ்வு சிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும்.
திருவாதிரை : நட்பு மேம்படும்.
புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
கடகம் உறவினர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை சார்ந்த பணிகளில் வரவுகள் மேம்படும். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
ஆயில்யம் : வரவுகள் மேம்படும்.
சிம்மம் திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். இழுபறியான சில விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களின் மூலம் வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
கன்னி புதிய வியாபார பணிகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதமும், அனுபவமும் ஏற்படும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : தடைகள் நீங்கும்.
அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.
சித்திரை : சேமிப்புகள் குறையும்.
துலாம் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
சுவாதி : தடைகள் விலகும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
விருச்சிகம் விலகி இருந்தவர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். நபர்களின் தன்மைகளை அறிந்து உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சந்தேக உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்குத் தெளிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : மாற்றமான நாள்.
தனுசு மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். எதிர் பாலின மக்களின் செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : கட்டுப்பாடுகள் குறையும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
மகரம் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : சுறுசுறுப்பான நாள்.
அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.
கும்பம் பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் மேன்மை ஏற்படும். அலுவலகத்தில் மரியாதை உயரும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகளை சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
மீனம்நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சோர்வு நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.
ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.