Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்ராசிபலன் - 08.10.2022

ராசிபலன் – 08.10.2022

ராசிபலன் – 08.10.2022

சுபகிருது வருடம், புரட்டாசி 21, சனிக்கிழமை, 8.10.2022,
வளர்பிறை 

திதி : இன்று அதிகாலை 04.15 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

நட்சத்திரம் : இன்று இரவு 06.11 மணி வரை பூரட்டாதி. பின்பு உத்திரட்டாதி.

நாமயோகம் : இன்று அதிகாலை 12.47 மணி வரை கண்டம். பின்னர் இரவு 10.26 மணி வரை விருத்தி. பின்பு துருவம்.

கரணம் : இன்று அதிகாலை 04.15 மணி வரை தைத்தூலம் . பின்னர் மாலை 04.12 மணி வரை

கரசை:பின்பு வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 மணி வரை சித்த யோகம். பின்னர் 06.11 மணி வரை மரணயோகம். பின்பு சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு :

இரவு :09.30 முதல் 10.30 மணி வரை

 

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

சூலம்: கிழக்கு.

பரிகாரம்: தயிர்

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும்.

⭐️அசுவினி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி நலம் தரும்.

⭐️பரணி: உங்கள் ஆலோசனையால் உயர்ந்த ஒருவர் உங்களைத்தேடி வருவார். ஆதாயமான நாள்.

⭐️கார்த்திகை 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*

இன்று உங்கள் இல்லம் தேடி ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.

⭐️கார்த்திகை 2, 3, 4: வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.

⭐️ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

⭐️மிருகசீரிடம் 1, 2: உயர் நிலையில் இருப்பவரின் உதவியுடன் உங்கள் முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்கள்.

*_🔯 மிதுனம் -ராசி: 👫_*

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனம் தேவை.

⭐️மிருகசீரிடம்3,4:வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள் உங்கள் முயற்சி லாபமாகும்.

⭐️திருவாதிரை: புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

⭐️புனர்பூசம் 1, 2, 3: செயல்களில் இருந்த தடை விலகும். முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்

*_🔯 கடகம் -ராசி: 🦀_*

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

⭐️புனர்பூசம் 4: அலைச்சல் கூடும். மனம் சோர்வடையும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

⭐️பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் குழப்பம் உண்டாகும். பயணத்தில் கவனம் தேவை.

⭐️ஆயில்யம்: பயணத்தில் வாகனம் பழுதடையக்கூடும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்

*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.27 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்

⭐️மகம்: உங்கள் வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்பளிப்பார்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

⭐️பூரம்: உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

⭐️உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_*

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.

⭐️உத்திரம் 2, 3, 4: உறவினருக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்ப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

⭐️அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். செயல்களில் உண்டான தடைகள் விலகும்.

⭐️சித்திரை 1, 2: பொதுநலனில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் பணி மற்றவர்களால் பாராட்டப்படும்

*_🔯 துலாம் -ராசி: ⚖_*

இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

⭐️சித்திரை 3, 4: பொறுப்புகள் அதிகரிக்கும். மேலை நாட்டு தொடர்பு ஒன்றால் நன்மை ஏற்படும்.

⭐️சுவாதி: குடும்பத்தினருடன் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். சிந்தித்து செயல்படவும்.

⭐️விசாகம் 1, 2, 3: பயணத்தால் ஆதாயம் காண்பீர்கள். மாற்று இனத்தவரால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

⭐️விசாகம் 4: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். நட்பால் மகிழ்ச்சி உண்டு.

⭐️அனுஷம்: தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

⭐️கேட்டை: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

*_🔯தனுஷ்ராசி: 🏹_*

இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும்.

⭐️மூலம்: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.

⭐️பூராடம்: உறவினர்கள் வழியே நலம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

⭐️உத்திராடம் 1: வேலை தேடியவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு வரும். முயற்சி வெற்றியாகும்.

*_🔯 மகரம் -ராசி: 🐴_*

இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

⭐️உத்திராடம் 2, 3, 4: எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.

⭐️திருவோணம்: குடும்பத்திற்காக திட்டமிட்டிருந்த செயல்களை நடத்தி முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

⭐️அவிட்டம் 1, 2: குடும்பத்தினர் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர்கள்.

*_🔯 கும்பம் -ராசி. ⚱_*

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிகள் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

⭐️அவிட்டம் 3, 4: சங்கடங்களை மறந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள்.

⭐️சதயம்: கடந்த கால அனுபவங்களைக் கொண்டு உங்கள் வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

⭐️பூரட்டாதி 1, 2, 3: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். நிதிநிலை உயரும்.

*_🔯 மீனம் -ராசி: 🐠_*

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபார ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

⭐️பூரட்டாதி4 : எதிர்பார்த்த செய்தி வீடு வந்து சேரும். விஐபிகளின் ஆதரவால் புதிய பாதை தெரியும்.

⭐️உத்திரட்டாதி : செலவுகளைக் கட்டுப்படுத்துவது பற்றி சிந்திப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

⭐️ரேவதி : அனுபவசாலிகளின் வழிகாட்டுதலுடன் ஒரு முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: