Wednesday, April 17, 2024
Homeஆன்மிகம்ராசிப்பலன் - 11.10.2022

ராசிப்பலன் – 11.10.2022

ராசிப்பலன் -(11.10.2022)

11-10-2022, புரட்டாசி 24, செவ்வாய் கிழமை, துதியை திதி பின் இரவு 01.30 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

அஸ்வினி நட்சத்திரம் மாலை 04.17 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.

திதி

கிருஷ்ண பக்ஷ துவிதியை – Oct 11 01:39 AM – Oct 12 01:29 AM

கிருஷ்ண பக்ஷ திருதியை – Oct 12 01:29 AM – Oct 13 01:59 AM

நட்சத்திரம்

அஸ்வினி – Oct 10 04:02 PM – Oct 11 04:17 PM

பரணி – Oct 11 04:17 PM – Oct 12 05:10 PM

கரணம்

சைதுளை – Oct 11 01:39 AM – Oct 11 01:29 PM

கரசை – Oct 11 01:29 PM – Oct 12 01:29 AM

வனசை – Oct 12 01:29 AM – Oct 12 01:39 PM

யோகம்

ஹர்ஷணம் – Oct 10 04:42 PM – Oct 11 03:16 PM

வஜ்ரம் – Oct 11 03:16 PM – Oct 12 02:20 PM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:02 AM

சூரியஸ்தமம் – 5:48 PM

சந்திரௌதயம் – Oct 11 7:02 PM

சந்திராஸ்தமனம் – Oct 12 7:55 AM

அசுபமான காலம்

இராகு – 2:52 PM – 4:20 PM

எமகண்டம் – 8:58 AM – 10:27 AM

குளிகை – 11:55 AM – 1:23 PM

துரமுஹுர்த்தம் – 08:23 AM – 09:10 AM, 10:42 PM – 11:31 PM

தியாஜ்யம் – 02:14 AM – 03:54 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:32 AM – 12:19 PM

அமிர்த காலம் – 09:00 AM – 10:38 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:26 AM – 05:14 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:32 AM – 12:19 PM

அமிர்த காலம் – 09:00 AM – 10:38 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:26 AM – 05:14 AM

வாரசூலை

சூலம் – வடக்கு

பரிகாரம் – பால்

நாள் – சம நோக்கு நாள்

பிறை – தேய்பிறை

*ராசிபலன்*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும்.

⭐️அஸ்வினி :அஸ்வினி: நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்து இருப்பீர்கள்.

⭐️பரணி :வசீகரமான பேச்சால் அனைவரையும் வசியப்படுத்துவீர்கள்.

⭐️கிருத்திகை : உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

*════════════════*

*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*

இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

⭐️கிருத்திகை : உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

⭐️ரோகிணி :பொருளாதார முன்னேற்றம் தொழிலுக்கு உதவும்.

⭐️மிருகசீரிஷம் :பித்தப்பை கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.

*════════════════*

*_🔯 மிதுனம் -ராசி: 👫_* 

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

⭐️மிருகசீரிஷம் : பித்தப்பை கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.

⭐️திருவாதிரை : பெரியோரின் ஆசியால் நல்ல காரியம் நடக்கும்.

⭐️புனர்பூசம் : மங்கல நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

*════════════════*

*_🔯 கடகம் -ராசி: 🦀_*

தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

⭐️புனர்பூசம் : மங்கல நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

⭐️பூசம் : இயந்திரங்கள் பழுது. தொழிலுக்குப் பாதிப்பு.

⭐️ஆயில்யம்: மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டீர்கள்.: புத்திசாலித்தனத்தால் புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.

*════════════════*

*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*

இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

⭐️மகம் : உழைப்பு மூலம் உயர்வை அடைவீர்கள்.

⭐️பூரம் : காத்திருக்கும் இளைஞர்களுக்கு காதல் கைகூடும்.

⭐️உத்திரம் : சூடான வார்த்தைகளால் சுற்றத்தாரின் பகை உண்டாகும்.

*════════════════*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_*

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

⭐️உத்திரம் : சூடான வார்த்தைகளால் சுற்றத்தாரின் பகை உண்டாகும்.

⭐️அஸ்தம் :இதமான வார்த்தைகளால் காரியம் சாதிப்பீர்கள்.

⭐️சித்திரை : மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டீர்கள்.

*════════════════*

*_🔯 துலாம் -ராசி: ⚖_*

இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

⭐️சித்திரை : மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டீர்கள்.

⭐️சுவாதி : குடும்பத்தினருடன் ஆலய வழிபாடு செய்வீர்கள்

⭐️விசாகம் : அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.

*════════════════*

*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

⭐️விசாகம் :அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.

⭐️அனுஷம் : நண்பர்களின் உதவியால் நல்லது நடக்கும்.

⭐️கேட்டை : ஆடம்பரமாக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.

*════════════════*

*_🔯தனுஷ் -ராசி: 🏹_*

தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

⭐️மூலம் :போட்டி பந்தயங்களை சற்று தள்ளி வையுங்கள்.

⭐️பூராடம் : அலங்காரப் பொருட்கள் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

⭐️உத்திராடம் : காத்திருந்த அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும்.

*════════════════*

*._🔯 மகரம் -ராசி: 🐴_*

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.*

⭐️உத்திராடம் : காத்திருந்த அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும்.

⭐️திருவோணம் :தாயார் வழிச் சொத்துகள் தக்க சமயத்தில் உதவும்.

⭐️அவிட்டம் : பிடிவாதமாக நின்று காரியத்தைச் சாதிப்பீர்கள் .

*════════════════*

*_🔯 கும்பம் -ராசி. ⚱_*

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

⭐️அவிட்டம் : பிடிவாதமாக நின்று காரியத்தைச் சாதிப்பீர்கள் .

⭐️சதயம் : ஆன்மீகவாதிகளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும் .

⭐️பூரட்டாதி : மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

*════════════════*

*_🔯 மீனம் -ராசி: 🐠_*

இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். அசையா சொத்துக்களால் நற்பலன்கள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்

⭐️பூரட்டாதி :மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

⭐️உத்திரட்டாதி: வங்கிக் கடனுதவி வியாபாரத்திற்கு உதவும்.

⭐️ரேவதி: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments