நாள் -தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, புரட்டாசி 28 ↔
நாள் – சம நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ சஷ்டி [ Tithi Vridhi ] – Oct 15 04:52 AM – Oct 16 07:03 AM
நட்சத்திரம்
மிருகசீரிடம் – Oct 14 08:47 PM – Oct 15 11:22 PM
திருவாதிரை – Oct 15 11:22 PM – Oct 17 02:14 AM
கரணம்
கரசை – Oct 15 04:53 AM – Oct 15 05:55 PM
வனசை – Oct 15 05:55 PM – Oct 16 07:04 AM
யோகம்
வரியான் – Oct 14 01:57 PM – Oct 15 02:24 PM
பரீகம் – Oct 15 02:24 PM – Oct 16 03:08 PM
அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்
காலை : 08.00 முதல் 09.00 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
வாரம்
சனிக்கிழமை
ராசிராசி பலன்கள் 15.10.2022
சனிக்கிழமை சிறப்புகள்
- பயணம் மேற்கொள்ள ஏற்ற நாள்.
- விவசாய பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.
- கிணறுகளை பராமரிக்க உகந்த நாள்
- கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்.
மேஷம்
வியாபாரப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
💠 அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அஸ்வினி : இழுபறிகள் குறையும்.
⭐️பரணி : அறிமுகம் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : கலகலப்பான நாள்.
ரிஷபம்
தனவரவிற்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். மனதில் குழப்பமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
⭐️கிருத்திகை : விரயங்கள் உண்டாகும்.
⭐️ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
⭐️மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்
வியாபார பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகளால் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
கடகம்
புதிய முயற்சிகளில் லாபம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். எந்தவொரு செயல்பாடுகளிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
⭐️புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.
⭐️பூசம் : ஆதரவான நாள்.
⭐️ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
சிம்மம்
செய்கின்ற முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான இன்னல்கள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.
⭐️மகம் : சாதகமான நாள்.
⭐️பூரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐️உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
கன்னி
செய்கின்ற பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
⭐️உத்திரம் : லாபகரமான நாள்.
⭐️அஸ்தம் : மாற்றம் ஏற்படும்.
⭐️சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
துலாம்
பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வும், காலதாமதமும் உண்டாகும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றிய புரிதல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
⭐️சித்திரை : காலதாமதம் உண்டாகும்.
⭐️சுவாதி : மாற்றம் ஏற்படும்.
⭐️விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் பதற்றமின்றி செயல்படவும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உதவி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️விசாகம் : தெளிவு பிறக்கும்.
⭐️அனுஷம் : பதற்றமின்றி செயல்படவும்.
⭐️கேட்டை : சாதகமான நாள்.
தனுசு
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.
⭐️மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூராடம் : உதவி கிடைக்கும்.
⭐️உத்திராடம் : செல்வாக்கு மேம்படும்.
மகரம்
இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.
⭐️உத்திராடம் : மேன்மையான நாள்.
⭐️திருவோணம் : அனுபவம் உண்டாகும்.
⭐️அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கும்பம்
மாணவர்களுக்கு கற்றலில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான அணுகுமுறையின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் திறமைகளை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.
⭐️அவிட்டம் : அனுகூலமான நாள்.
⭐️சதயம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
⭐️பூரட்டாதி : திறமைகளை அறிவீர்கள்.
மீனம்
எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
⭐️பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : தனவரவு கிடைக்கும்.
⭐️ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.