இன்றைய நாள் (17-12- 2022)
தமிழ் ஆண்டு, தேதி – சுபகிருது, மார்கழி 2 ↑
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ நவமி – Dec 17 03:02 AM – Dec 18 03:41 AM
கிருஷ்ண பக்ஷ தசமி – Dec 18 03:41 AM – Dec 19 03:32 AM
நட்சத்திரம்
உத்திரம் – Dec 16 07:34 AM – Dec 17 09:18 AM
அஸ்தம் – Dec 17 09:18 AM – Dec 18 10:18 AM
கரணம்
சைதுளை – Dec 17 03:02 AM – Dec 17 03:28 PM
கரசை – Dec 17 03:28 PM – Dec 18 03:41 AM
வனசை – Dec 18 03:41 AM – Dec 18 03:43 PM
யோகம்
ஆயுஷ்மான் – Dec 16 07:46 AM – Dec 17 07:34 AM
சௌபாக்யம் – Dec 17 07:34 AM – Dec 18 06:48 AM
வாரம்
சனிக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:28 AM
சூரியஸ்தமம் – 5:41 PM
சந்திரௌதயம் – Dec 17 12:28 AM
சந்திராஸ்தமனம் – Dec 17 12:52 PM
அசுபமான காலம்
இராகு – 9:16 AM – 10:40 AM
எமகண்டம் – 1:29 PM – 2:53 PM
குளிகை – 6:27 AM – 7:52 AM
துரமுஹுர்த்தம் – 07:57 AM – 08:42 AM
தியாஜ்யம் – 06:03 PM – 07:43 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் – 11:42 AM – 12:27 PM
அமிர்த காலம் – 04:03 AM – 05:43 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:52 AM – 05:40 AM
ஆனந்ததி யோகம்
உற்பாதம் Upto – 09:18 AM
மிருத்யு
சனிக்கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – சனி – அசுபம்
07:00 – 08:00 – குரு – சுபம்
08:00 – 09:00 – செவ் – அசுபம்
09:00 – 10:00 – சூரி – அசுபம்
10:00 – 11:00 – சுக் – சுபம்
11:00 – 12:00 – புத – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சந் – சுபம்
01:00 – 02:00 – சனி – அசுபம்
02:00 – 03:00 – குரு – சுபம்
மாலை
03:00 – 04:00 – செவ் – அசுபம்
04:00 – 05:00 – சூரி – அசுபம்
05:00 – 06:00 – சுக் – சுபம்
06:00 – 07:00 – புத – சுபம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர
இன்றைய ராசி பலன்கள்(17-12-2022)
மேஷம் போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எண்ணங்களில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். முயற்சிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரிஷபம் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். பிள்ளைகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். சுயதொழிலில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.
மிதுனம் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காதில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். தனவரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம் மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் அமையும். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கு ஏற்ப உயர்வு உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முடிவினை எடுப்பீர்கள். எந்தவொரு செயல்பாட்டிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூசம் : உயர்வு உண்டாகும்.
ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும்.
சிம்மம் சாதுரியமான பேச்சுக்களின் மூலம் லாபம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : லாபம் உண்டாகும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.
கன்னி பொருள் வரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய நினைவுகளால் அமைதியற்ற சூழல் ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : இழுபறிகள் குறையும்.
துலாம் வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். நம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
சுவாதி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் : திருப்தியற்ற நாள்.
விருச்சிகம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : லாபகரமான நாள்.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கேட்டை : பிரச்சனைகள் குறையும்.
தனுசு மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : உதவி கிடைக்கும்.
பூராடம் : கவலைகள் நீங்கும்.
உத்திராடம் : தாமதங்கள் குறையும்.
மகரம் சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு மேம்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : வெற்றிகரமான நாள்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.
கும்பம் ஞாபகமறதியால் சில பிரச்சனைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பிறரை விமர்சிப்பதால் தேவையற்ற இன்னல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : மந்தமான நாள்.
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
மீனம் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.