Thursday, September 21, 2023
Homeஆன்மிகம்ராசி பலன்கள் 18-11-2022

ராசி பலன்கள் 18-11-2022

இன்றைய நாள் (18-11-2022)

நாள் : சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 02 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 18.11.2022

திதி : இன்று காலை 07.18 மணி வரை நவமி. பின்பு தசமி.

நட்சத்திரம் : இன்று இரவு 09.33 மணி வரை பூரம். பின்னர் உத்திரம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 12.07 மணி வரை ஐந்திரம். பின்னர் இரவு 11.51 மணி வரை வைதிருதி. பின்பு விஷ்வகம்பம்

கரணம் : இன்று காலை 07.18 மணி வரை கரசை . பின்னர் இரவு 07.43 மணி வரை வணிசை. பின்பு பத்தரை.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: காலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: பகல் 07.30 முதல் 09.00 மணி வரை.

சூலம்: மேற்கு.

பரிகாரம்: வெல்லம்.

இன்றைய ராசி பலன்கள் (18-11-2022)

மேஷம் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். புதுவிதமான இலக்கை மனதில் நிர்ணயம் செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

⭐அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

⭐பரணி : இலக்குகள் பிறக்கும்.

⭐கிருத்திகை : சூட்சுமங்களை அறிவீர்கள்.

ரிஷபம மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

⭐கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

⭐ரோகிணி : கவனம் வேண்டும்.

⭐மிருகசீரிஷம் : ஈர்ப்பு ஏற்படும்.

மிதுனம் செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் நீங்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை வளம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

⭐மிருகசீரிஷம்: தடைகள் நீங்கும்.

⭐திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடகம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். சிக்கல்கள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐புனர்பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

⭐பூசம் : எண்ணங்கள் கைகூடும்.

⭐ஆயில்யம் : மாற்றமான நாள்.

சிம்மம் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாயம் நிமிர்த்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் குழப்பம் குறையும். மனதில் வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

⭐மகம் : முடிவு கிடைக்கும்.

⭐பூரம் : அனுசரித்து செல்லவும்.

⭐உத்திரம் : குழப்பம் குறையும்.

கன்னி எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். விருத்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

⭐உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

⭐அஸ்தம் : ஆதாயம் ஏற்படும்.

⭐சித்திரை : ஒத்துழைப்பான நாள்.

துலாம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

⭐சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

⭐சுவாதி : சுறுசுறுப்பான நாள்.

⭐விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டு வியாபார பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

⭐விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

⭐அனுஷம் : உதவி கிடைக்கும்.

⭐கேட்டை: வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வர்த்தக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐மூலம் : சாதகமான நாள்.

⭐பூராடம் : செல்வாக்கு மேம்படும்.

⭐உத்திராடம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இணையம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தினை குறைத்து கொள்வது நல்லது. விரயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

⭐உத்திராடம் : குழப்பமான நாள்.

⭐திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.

⭐அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். காலதாமதமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

⭐அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

⭐சதயம் : ஆதரவான நாள்.

⭐பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

மீனம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

⭐பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.

⭐உத்திரட்டாதி : ஆதரவான நாள்.

⭐ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments