இன்றைய நாள் (19-11-2022)
நாள் : சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 03 ஆம் தேதி சனிக்கிழமை 19.11.2022
திதி : இன்று காலை 08.09 மணி வரை தசமி. பின்பு ஏகாதசி.
நட்சத்திரம் : இன்று இரவு 10.43 மணி வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
நாமயோகம் : இன்று இரவு 11.13 மணி வரை விஷ்வகம்பம். பின்பு பிரீதி.
கரணம் : இன்று காலை 08.09 மணி வரை பத்தரை . பின்னர் இரவு 08.21 மணி வரை பவம். பின்பு பாலவம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.14 மணி வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்.
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
காலை : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்.
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
வாரசூலம்
சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.
இன்றைய ராசி பலன்கள். (19-11-2022)
மேஷம் வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
⭐அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐பரணி : இழுபறிகள் குறையும்.
⭐கிருத்திகை : லாபம் கிடைக்கும்.
ரிஷபம் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சோர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
⭐கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
⭐ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.
⭐மிருகசீரிஷம் : சோர்வு நீங்கும்.
மிதுனம்உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
⭐மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
⭐திருவாதிரை : மாற்றம் ஏற்படும்.
⭐புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
கடகம்மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். நிதானமான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி ஏற்படும். தாமதம் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
⭐புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
⭐பூசம் : ஆதரவான நாள்.
⭐ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும்.
சிம்மம் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
⭐மகம் : நெருக்கடிகள் குறையும்.
⭐பூரம் : இழுபறிகள் நீங்கும்.
⭐உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
கன்னி குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தடைகள் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
⭐உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐சித்திரை : சாதகமான நாள்.
துலாம் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய முடிவு காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதில் சமூகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிரமம் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
⭐சித்திரை : அனுபவம் வெளிப்படும்.
⭐சுவாதி : கட்டுப்பாடுகள் குறையும்.
⭐விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சிகம் உடல் தோற்றப்பொலிவு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். மனதில் புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
⭐விசாகம் : ஆதரவான நாள்.
⭐அனுஷம் : லாபம் அதிகரிக்கும்
⭐கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
தனுசுஅரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
⭐மூலம் : முன்னேற்றமான நாள்.
⭐பூராடம் : கவனம் வேண்டும்.
⭐உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
மகரம் மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிக்கல்கள் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
⭐உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐திருவோணம் : முயற்சிகள் மேம்படும்.
⭐அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
கும்பம் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். புதிய முடிவினை எடுக்கும் பொழுது பொரியோர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தற்பெருமை சார்ந்த எண்ணங்களை குறைத்து கொள்ளவும். தொழில் சார்ந்த கூட்டாளிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
⭐அவிட்டம் : குழப்பம் ஏற்படும்
⭐சதயம் : அனுசரித்து செல்லவும்.
⭐பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
மீனம் இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மறதி குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
⭐பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
⭐உத்திரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.
⭐ரேவதி : பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.