Monday, February 6, 2023
Homeஆன்மிகம்ராசி பலன்கள் (19-12-2022)

ராசி பலன்கள் (19-12-2022)

இன்றைய நாள்(19-12-2022)

நாள் : சுபகிருது வருடம் மார்கழி மாதம் 04 ஆம் தேதி திங்கட்கிழமை 19.12.2022

திதி : இன்று இரவு 10.54 மணி வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

நட்சத்திரம் : இன்று காலை 07.13 மணி வரை சித்திரை. பின்னர் சுவாதி.

நாமயோகம் : இன்று அதிகாலை 02.27 மணி வரை சோபனம். பின்பு ‌ அதிகண்டம்.

கரணம் : இன்று காலை 10.29 மணி வரை பவம் . பின்னர் இரவு 10.54 வரை பாலவம். பின்பு கௌலவம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 07.13 சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

வாரசூலம்

சூலம்: கிழக்கு.

பரிகாரம்: தயிர்.

இன்றைய ராசி பலன்கள் (19-12-2022)

மேஷம் குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தற்பெருமை பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. நண்பர்களின் வருகையால் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். காணாமல் போன சில பொருட்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணைவரிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : புரிதல் மேம்படும்.

பரணி : அனுபவம் உண்டாகும்.

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரிஷபம் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இழுபறியான வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பாலின மக்களின் ஆதரவின் மூலம் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : மாற்றமான நாள்.

ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம் உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். போட்டி நிமிர்த்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : தேடல் உண்டாகும்.

திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.

புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம் வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் உள்ள இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூசம் : தெளிவு ஏற்படும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உங்களின் மீதான வதந்திகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் மறைமுக ஆதரவு கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : தெளிவு பிறக்கும்.

பூரம் : வாய்ப்புகள் ஏற்படும்.

உத்திரம் : ஆர்வம் மேம்படும்.

கன்னி அரசு தொடர்பான பயணங்கள் கைகூடும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : முன்னேற்றமான நாள்.

அஸ்தம் : உதவி கிடைக்கும்.

சித்திரை : மேன்மையான நாள்.

துலாம் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் பேச்சுக்களில் தடுமாற்றம் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

சுவாதி : இலக்குகள் பிறக்கும்.

விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.

விருச்சிகம் போட்டி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். அறம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதுமையான சூழல் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

அனுஷம் : அனுசரித்து செல்லவும்.

கேட்டை : புதுமையான நாள்.

தனுசு உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் உயர்வு உண்டாகும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வத்தால் விரயங்கள் உண்டாகும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குருமார்களின் ஆசிர்வாதம் மனதில் தெளிவினை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மூலம் : உயர்வு உண்டாகும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : தெளிவு ஏற்படும்.

மகரம் சமூக பணிகளில் ஆதரவு மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றம் ஏற்படும். மருத்துவம் தொடர்பான சிகிச்சைகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.

திருவோணம் : அனுகூலமான நாள்.

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

கும்பம் திறமைகளை வெளிப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபார பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சதயம் : தன்னம்பிக்கை மேம்படும்.

பூரட்டாதி : காலதாமதம் நீங்கும்.

மீனம் மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. பொன், பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெளியில் உணவு உண்பதை குறைத்து கொள்ளவும். அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் பேசும் பொழுது கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : பொறுமை வேண்டும்.

உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

ரேவதி : கவனம் வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments